அரசு அலுவலகத்தில் பிரார்த்தனை கூட்டம்: அதிகாரி அதிரடியாக சஸ்பெண்ட்!

சஸ்பெண்ட்
சஸ்பெண்ட்

கேரளாவில் அரசு அலுவலகத்தில் பிரார்த்தனை செய்ததாக அரசு அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்சியர் கிருஷ்ண தேஜா
ஆட்சியர் கிருஷ்ண தேஜா

கேரளா மாநிலம் திருச்சூரில் குழந்தைகள் மேம்பாட்டு அதிகாரியாக பணியாற்றியவர் கே.ஏ.பிந்து. இவர் அரசு அலுவலகத்தில் பிரார்த்தனை செய்ததாக புகார் எழுந்தது. அவரது அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியர் ஒருவர், சம்பவ நாளன்று கிறிஸ்தவ அங்கியை அணிந்து அந்த அலுவலகத்தின் தலைவரான பிந்துவின் வழிகாட்டுதல்படி பிரார்த்தனை செய்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் கிருஷ்ண தேஜா, கடந்த நவ.11-ம் தேதி சப்-கலெக்டரிடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து குழந்தைகள் மேம்பாட்டு அதிகாரி பிந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

பிரார்த்தனை
பிரார்த்தனை

இதுகுறித்து பிந்து கூறுகையில்," நவ.18-ம் தேதி விடுமுறையில் இருந்தேன். நவ.20-ம் தேதி அலுவலகத்திற்கு வந்த போது, சஸ்பெண்ட் உத்தரவு கிடைத்தது. அதில் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அதனால் இப்போதே கிளம்புகிறேன்" என்றார்.

செப்டம்பர் மாதம் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக அந்த அதிகாரி அளித்த விளக்கத்தைக் கேட்காமலோ அல்லது பதிலளிக்காமலோ அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அலுவலக நேரம் முடிந்து மாலை 5.30 மணியளவில் அவர் பிரார்த்தனை நடத்தியதாகவும், இதனால் துறையின் செயல்பாடுகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அதிகாரியின் ஆதரவு வட்டாரங்கள் தெரிவித்தன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in