
ஆந்திராவைச் சேர்ந்த பெண்ணுக்கு விமானத்தில் பாலியல் தொல்லை கொடுத்தவரை பெங்களூரு விமான நிலையத்தில் போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம், சித்தூரைச் சேர்ந்த 32 வயது பெண் ஜெர்மனியில் உள்ள ஃபிராங்பர்ட்டில் இருந்து பெங்களூருவுக்கு லுஃப்தான்சா விமானத்தில் நேற்று பயணம் செய்துள்ளார்.
அப்போது அருகில் பயணியாக இருந்த 52 வயது நபர், அந்த பெண்ணின் அந்தரங்க பாகங்களை அடிக்கடித் தொட்டு பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த பெண் கண்டித்தும், தொடர்ந்து அந்த நபர், பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட பெண், விமானப் பணிப்பெண்ணிடம் புகார் செய்தார். இதையடுத்து அந்த பெண் வேறு இருக்கையில் அமர வைக்கப்பட்டார். இந்த நிலையில், பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியவுடன் சம்பந்தப்பட்ட நபர் மீது ஆந்திராவைச் சேர்ந்த பெண், காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீஸார் அவரைப் பிடித்து விசாரணை நடத்திய போது, அவர் பெயர் சங்கரநாராயணன் ரெங்கநாதன்(52) என்பது தெரிய வந்தது. அவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
கோடிக்கணக்கில் பணம், தங்கம், வைரம் பறிமுதல்... தெறிக்கவிட்ட தேர்தல் பறக்கும் படை!
அதிர்ச்சி! தவறான சிகிச்சையால் +2 மாணவன் உயிரிழப்பு... மருத்துவர் கைது!
80 வயது முதியவரை 26 வயது இளைஞனாக்கலாம்… விஞ்ஞானிகள் சாதனை!
தேனியில் பரபரப்பு.. கவுன்சிலர்களின் பிச்சை எடுத்து போராட்டம்!
பிக் பாஸ் நிக்சனின் சில்மிஷ வீடியோ... போட்டியாளர்கள் அதிர்ச்சி!