ரயில் நிலையத்தில் தூக்கில் தொங்கிய வாலிபர்... பெங்களூருவில் பெரும் பரபரப்பு!

தேவனஹள்ளி ரயில் நிலையத்தில் தூக்கில் தொங்கிய வாலிபர் உடல் குறித்து போலீஸ் விசாரணை
தேவனஹள்ளி ரயில் நிலையத்தில் தூக்கில் தொங்கிய வாலிபர் உடல் குறித்து போலீஸ் விசாரணை

பெங்களூரு ரயில் நிலையத்தில் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேவனஹள்ளி ரயில் நிலையம்
தேவனஹள்ளி ரயில் நிலையம்

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் புதிதாக பிரம்மாண்ட ரயில் நிலையம், 2,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது. இந்த ரயில் நிலையம் தேவனஹள்ளியில் அமைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கே.எஸ்.ஆர் பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து 37 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. பெங்களூரு மாநகரில் உள்ள மக்கள் நெருக்கடியைக் குறைக்கும் வகையில் தேவனஹள்ளியில் புதிய ரயில் நிலையம் அமைய உள்ளது.

தேவனஹள்ளி ரயில் நிலையம்
தேவனஹள்ளி ரயில் நிலையம்

இந்த நிலையில், தேவனஹள்ளி ரயில் நிலையத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம் இருப்பதைக் கண்ட பொதுமக்கள், இதுகுறித்து உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீஸார், தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபரின் சடலத்தை மீட்டனர். அவரின் உடல் முழுவதும் காயம் இருந்ததால் அவரை யாரும் அடித்துக் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டார்களா அல்லது அவராக தற்கொலை செய்து கொண்டாரா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்த உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தேவனஹள்ளி ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...    

அறை எண் 2-ல் அடைக்கப்பட்டார் அர்விந்த் கேஜ்ரிவால்... திகார் சிறையில் என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?

உஷார்... இந்த வருடம் கோடை வெயில் அதிகரிக்கும்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அதிகாலையில் கோர விபத்து... ஆம்னி பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி இருவர் உயிரிழப்பு!

பாஜகவில் இணைகிறாரா டி.ஆர். பாலுவின் மகள்?.. திமுகவை திக்குமுக்காடச் செய்ய பலே திட்டம்!

தொடரும் ஈ.டி அதிரடி... திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பியின் ரூ.29 கோடி சொத்துகள் முடக்கம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in