அதிர்ச்சி... காவி உடையில் வந்த மாணவர்களை ஆசிரியர் கேள்வி எழுப்பியதால் சூறையாடப்பட்ட பள்ளி

தெலங்கானாவில் தாக்கப்பட்ட தனியார் பள்ளி
தெலங்கானாவில் தாக்கப்பட்ட தனியார் பள்ளி

தெலங்கானா மாநிலத்தில் காவி உடையில் வந்த மாணவர்களை, ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியதால், பள்ளி அடித்து நொறுக்கி, சூறையாடப்பட்டது.

தெலங்கானா மாநிலம், மஞ்சேரியல் மாவட்டம், கன்னேபள்ளி கிராமத்தில் ஒரு கிறிஸ்தவ பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிக்கு கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு, சில மாணவர்கள் காவி நிற உடை அணிந்து வந்துள்ளனர். அவர்களை கண்ட பள்ளியின் முதல்வர் ஜெய்மோன் ஜோசப், அது குறித்து விசாரித்துள்ளார். இதற்கு மாணவர்கள் தாங்கள், தாங்கள் 21 நாள் ஹனுமன் தீக்ஷா விரதம் இருந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, பள்ளி முதல்வர், மாணவர்களை தங்களது பெற்றோர்களை அழைத்து வரும்படி கூறியுள்ளார். பின்னர் அவர்களின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு, அவர்களிடம் பள்ளி முதல்வர் இது தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவின. இந்நிலையில், சிறிது நேரத்தில் பள்ளிக்கு வந்த ஒரு கும்பல் திடீரென பள்ளியில் இருந்த பொருள்களை அடித்து நொறுக்கி சூறையாடியது.

இந்த காட்சிகளும் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. வீடியோவில், அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷங்களை எழுப்புவதையும், பள்ளியின் ஜன்னல் கண்ணாடிகளை உடைக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. மேலும், போலீஸார் அவர்களை அங்கிருந்து வெளியேற்ற முயலும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

கலவரக்காரர்கள் பள்ளி வளாகத்தில் இருந்த அன்னை தெரசாவின் சிலை மீது கற்களை வீசி தாக்கினர். சில நபர்கள் பள்ளி முதல்வர் ஜோசப்பைச் சுற்றி வளைத்து, அவரை தாக்கி, அவரது நெற்றியில் வலுக்கட்டாயமாக திலகம் வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அப்பள்ளி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பள்ளிக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய காவி உடை அணிந்தவர்கள்
பள்ளிக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய காவி உடை அணிந்தவர்கள்

இதற்கிடையே மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், மத உணர்வுகளை புண்படுத்துதல் மற்றும் மதத்தின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை வளர்ப்பது ஆகிய பிரிவுகளின் கீழ் பள்ளி முதல்வர் உள்பட இரண்டு ஊழியர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் மஞ்சேரி மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

கோவையில் பணப்பட்டுவாடா... கையும் களவுமாக சிக்கிய பாஜக பிரமுகர்!

முதற்கட்ட தேர்தலில் மோதும் 8 மத்திய அமைச்சர்கள்... வெற்றி கிடைக்குமா?

தேர்தல் நேரத்திலும் திகு திகு... சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

சிலிண்டர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தம்... தமிழ்நாட்டில் கியாஸ் தட்டுப்பாடு!

பாஜக தலைவரை கடத்திச்சென்ற கிளர்ச்சியாளர்கள்; அருணாச்சலப் பிரதேசத்தில் பரபரப்பு

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in