பதற வைத்த சிசிடிவி காட்சி... தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த மென்பொறியாளர் உயிரிழந்த சோகம்!

திறந்திருந்த தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த மென்பொறியாளர் உயிரிழப்பு
திறந்திருந்த தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த மென்பொறியாளர் உயிரிழப்பு

ஹைதராபாத்தில் தனியார் தங்கும் விடுதி ஒன்றில், மெயின் கேட் அருகிலேயே திறந்திருந்த தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து மென்பொருள் உயிரிழந்த பதற வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹதராபாத்தில் ஆஞ்சநேயா நகரில் ஷன்முக் என்ற பெயரில் தனியாருக்கு சொந்தமான ஆண்கள் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 30க்கும் மேற்பட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் தங்கி உள்ளனர். இங்கு ஹைதராபாத்தில் மென்பொருளாக பணியாற்றி வந்த ஷேக் அக்மல் (24) என்ற வாலிபர் தங்கி இருந்து வந்தார். கடந்த 21ம் தேதி அவர் விடுதி அறையில் இருந்து வெளியே சென்றிருந்தார்.

பின்னர் மீண்டும் தங்கும் விடுதிக்கு வந்த போது, வாசலிலேயே அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியின் மூடி திறந்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இதனை கவனிக்காமல் கேட்டைத் திறந்து வந்த ஷேக் அக்மல், எதிர்பாராத விதமாக தொட்டிக்குள் தவறி விழுந்தார். அவர் விழுந்த சத்தம் கேட்டு தங்கும் விடுதியில் தங்கி இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் தொட்டிக்குள் விழும் போது அவரது தலையில் பலத்த அடிபட்டு இருந்ததால், மயக்க நிலையில் இருந்த ஷேக் அக்மல் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கவனக்குறைவாக தொட்டியை திறந்து வைத்த விடுதி உரிமையாளர் மீது வழக்குப்பதிவு
கவனக்குறைவாக தொட்டியை திறந்து வைத்த விடுதி உரிமையாளர் மீது வழக்குப்பதிவு

இதையடுத்து தங்கும் விடுதியின் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள கச்சிபோலி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே ஷேக் அக்மல் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


+2க்கு பின்... பிசினஸ், காமர்ஸ், டிஜிட்டல் மார்க்கெட்டிங்... படிப்புகளுக்கு என்ன வாய்ப்பு?

பச்சைப் பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர்... விண்ணதிர ஒலித்த 'கோவிந்தா' முழக்கம்!

“விஜயதாரணி ஆசைப்படலை... பேராசைப்பட்டார்...” ஹசீனா சையத் விளாசல்!

நள்ளிரவில் மாட்டுவண்டி பயணம்... 300 ஆண்டு பாரம்பரிய நிகழ்ச்சியில் பக்தர்கள் பரவசம்!

பெரும் சோகம்... காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 18 குழந்தைகள் உள்பட 22 பேர் பலி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in