
சென்னையில் மெடிக்கல் ஷாப் பூட்டை உடைத்து பணம் மற்றும் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை கும்பல் ஒன்று அள்ளி சென்றது. இருசக்கர வாகனத்தில் வந்து பூட்டை உடைத்து திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவான்மியூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் தமிழ்குடிமகன். இவர் திருவான்மியூர் 7வது மெயின் ரோடு பகுதியில் ஓம் நமோ என்ற பெயரில் மருந்துக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு தமிழ்குடிமகன் வேலை முடிந்து கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று காலை இவரது மருந்துக்கடை பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனே தமிழ்குடிமகனுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த தமிழ்குடிமகன் கடை உள்ளே சென்று பார்த்தபோது கல்லாவில் இருந்த 21 ஆயிரம் பணம், வலி நிவாரணி மாத்திரைகளை மர்ம கும்பல் திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து தமிழ்குடிமகன் திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் சம்பவயிடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் உயர்ரக இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று கடை பூட்டை உடைத்து உள்ளே பணம் மற்றும் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை அள்ளிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் சிசிடிவி காட்சிகளில் பதிவான அடையாளங்களை வைத்து கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.
சென்னையில் மருந்துக்கடை பூட்டை உடைத்து போதைக்காக வலிநிவாரணி மாத்திரைகளை திருடி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
மும்பை காவல் துறைக்கு திடீர் மிரட்டல்: இந்தியா - நியூசிலாந்து போட்டிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
நரி, அமுல் பேபி என தினேஷ்- விஷ்ணு மோதல்:பிக் பாஸ் இல்லத்தில் அதகளம்!
'பிரதமர் மோடிதான் சிறந்த நடிகர்' - நடிகர் பிரகாஷ்ராஜ் காட்டம்!
என்.சங்கரய்யா உடலுக்கு அரசு மரியாதை: தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ஹிஜாப் அணிந்து தேர்வெழுத தடையா?: உயர் கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!