பகீர் வீடியோ... குருவாயூர் கோயில் யானைகளை அடித்து துன்புறுத்தும் பாகன்... ஜெயலலிதா வழங்கிய கிருஷ்ணாவுக்கும் துன்புறுத்தல்!

யானைகளை அடித்து துன்புறுத்திய யானைப்பாகன்கள்
யானைகளை அடித்து துன்புறுத்திய யானைப்பாகன்கள்

குருவாயூர் கோயிலுக்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கிய யானை உட்பட 3 யானைகளை பாகன்கள் அடித்து துன்புறுத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தின் திருச்சூர் மாவட்டத்தில் குருவாயூர் பகுதியில் பிரசித்தி பெற்ற குருவாயூரப்பன் கோயில் அமைந்துள்ளது. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

இந்த கோயிலில் ஏராளமான யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த யானைகள் கோயிலில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளின் போது, சுவாமியை சுமந்தபடி கோயிலில் ஊர்வலமாக வருவது வழக்கம். இதையொட்டி நாடு முழுவதும் உள்ள ஏராளமான பிரபலங்கள் குருவாயூர் கோயிலுக்கு யானைகளைக் காணிக்கையாக வழங்கியுள்ளனர்.

அந்த வகையில், தமிழ்நாடு முன்னாள் முதல்வரும், அதிமுக முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா, கடந்த 2001-ம் ஆண்டு கிருஷ்ணா என்ற யானை குட்டியை குருவாயூர் கோயிலுக்குக் காணிக்கையாக வழங்கியிருந்தார்.

இந்த கோயிலுக்குச் சொந்தமான யானைகள், குருவாயூர் அருகே உள்ள புன்னத்தூர் யானைக்கோட்டம் என்கிற பகுதியில் குருவாயூர் தேவஸ்தானம் சார்பில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த யானைகளைப் பராமரிப்பதற்காக 50-க்கும் மேற்பட்ட யானை பாகன்கள், உதவி பாகன்கள், சமையல் கலைஞர்கள், கால்நடை மருத்துவர்கள், கால்நடை மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

குருவாயூர் கோயிலுக்கு காணிக்கையாக வழங்கிய கிருஷ்ணா யானையுடன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா
குருவாயூர் கோயிலுக்கு காணிக்கையாக வழங்கிய கிருஷ்ணா யானையுடன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா

இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணா யானை உட்பட 3 யானைகளை, பாகன்கள் கடுமையாக அடித்து துன்புறுத்தி உள்ளனர். அப்போது யானைகளைப் பராமரிப்பதற்காக பயன்படுத்தப்படும் வடிகோள் எனப்படும் குச்சியைக் கொண்டு யானைகளை கடுமையாக பாகங்கள் தாக்கியுள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இதையடுத்து யானைகளைத் தாக்கி துன்புறுத்திய இரண்டு யானை பாகன்களைப் பணியிடை நீக்கம் செய்துள்ள தேவஸ்தானம், இது தொடர்பாக விசாரணை நடத்த குழு ஒன்றை அமைத்துள்ளது.

குருவாயூர் கோயிலுக்குச் சொந்தமான புன்னத்தூர் யானைக்கோட்டம்
குருவாயூர் கோயிலுக்குச் சொந்தமான புன்னத்தூர் யானைக்கோட்டம்

இதனிடைய ஆசிய யானைகள் அமைப்பு சார்பில் சங்கீதா என்பவர் கேரளா உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், யானைகளை தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் அனில்.கே.நரேந்திரன், ஜி.கிரீஷ் ஆகியோர் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது யானைகள் தாக்கப்பட்ட வீடியோவை பார்த்து நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

”யானைக்கோட்டத்தில் என்ன நடக்கிறது? யானைகளிடம் மோசமாக நடந்து கொண்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். யானைக்கோட்டத்தின் பொறுப்பாளர் யார்? பாகன்கள் மீது நடவடிக்கை எடுத்தது? என்பது குறித்து நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும்.”என்று அவர்கள் கடுமையாக கண்டனம் தெரிவித்தனர் .மேலும் யானைக்கோட்டம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் அமைத்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் அவர்கள் உத்தரவிட்டனர்.

இதனிடையே இந்த சம்பவம் நடைபெற்று சுமார் ஒரு மாத காலத்திற்கும் மேலாகி இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக யானை பாகன்கள் இதுபோன்று, யானைகளை அடித்து துன்புறுத்தி வந்திருக்கலாம் எனவும் தற்போது அச்சம் எழுந்துள்ளது.

கிருஷ்ணா யானை மட்டுமின்றி, கேசவன் குட்டி மற்றும் கஜேந்திரா ஆகிய யானைகளும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இதில் பாகன்கள் தாக்கியதில் கஜேந்திரா யானைக்கு காலில் காயம் ஏற்பட்டு நடப்பதற்கு சிரமப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியிருப்பது கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


ரஜினி மகளை உசுப்பேற்றும் ரசிகர்கள்... ஐஸ்வர்யாவுக்கு தனி கொடி அறிமுகப்படுத்தி அலப்பறை!

அதிர்ச்சி... நேரலையில் சிவசேனா பிரமுகரை சுட்டுக்கொன்றுவிட்டு, கொலையாளியும் தற்கொலை!

ஒலிம்பிக் மெடலுடன் ஈபிள் டவர் பகுதியை எடுத்து செல்லலாம்... பிரான்ஸ் அசத்தல் அறிவிப்பு!

பகீர் வீடியோ... தியேட்டருக்குள் தீவைத்து கொண்டாடிய ரசிகர்கள்!

மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம்... கால்களை பறிகொடுத்த இளைஞர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in