அதிகாலையில் அதிர்ச்சி... எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மை உடைத்து ரூ.10 லட்சம் கொள்ளை!

எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மை உடைத்து ரூ.10 லட்சம் கொள்ளை
எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மை உடைத்து ரூ.10 லட்சம் கொள்ளை

கிருஷ்ணகிரி அருகே அதிகாலையில் எஸ்பிஐ ஏடிஎம்மை உடைத்து ரூ.10 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், போலீஸார் என பல்வேறு தரப்பு அரசு அதிகாரிகளும் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தகுந்த ஆவணங்களின்றி பொதுமக்கள் ரூ.49 ஆயிரத்திற்கும் மேல் ரொக்கப்பணம் எடுத்துச் சென்றால், அவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. தேர்தல் அதிகாரிகளின் கெடுபிடிகள் காரணாமாக வணிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

குருபரப்பள்ளி பகுதியில் பரபரப்பு
குருபரப்பள்ளி பகுதியில் பரபரப்பு

இந்நிலையில் கிருஷ்ணகிரியில் நடைபெற்றுள்ள கொள்ளை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி பகுதியில் எஸ்பிஐ வங்கிக்கு சொந்தமாக ஏடிஎம் மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு இரவு நேர பாதுகாவலர்கள் நியமிக்கப்படவில்லை என தெரிகிறது. இன்று காலை அவ்வழியே சென்றோர், ஏடிஎம் மையத்தின் கண்ணாடி கதவுகள் திறந்திருந்ததோடு, உள்ளே இருந்த ஏடிஎம் இயந்திரமும் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

குருபரப்பள்ளி காவல் நிலையம்
குருபரப்பள்ளி காவல் நிலையம்

அவர்கள் அளித்த தகவலின் பேரில் போலீஸாரும், வங்கி அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். வங்கி அதிகாரிகளின் முதல் கட்ட தகவலின்படி ஏடிஎம் இயந்திரத்தில் சுமார் ரூ.10 லட்சம் ரொக்கப்பணம் இருந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஏடிஎம் மையம் மற்றும் அருகாமையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...   


ஓசூரில் பரபரப்பு... வாகன தணிக்கையில் ரூ.15 கோடி மதிப்பிலான நகைகள் சிக்கியது!

குண்டு கட்டாகத் தூக்கிச் சென்று வேலூர் இப்ராஹிம் கைது... அனுமதியின்றி பிரசாரம் செய்ததால் அதிரடி!

நான்கு பேரால் அக்கா, தங்கை கூட்டுப் பலாத்காரம்... காதலர்களைக் கட்டிப்போட்டு விடிய, விடிய நடந்த கொடூரம்!

மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசிய பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு...ஏப்ரல் 26-ம் தேதி பரபரப்பு தீர்ப்பு!

பெங்களூரு ஓட்டல் குண்டு வெடிப்பு வழக்கு... என்ஐஏ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in