விசாரணையில் போலீஸார் துன்புறத்தவில்லை; நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் விளக்கம்!

மதுரை நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்
மதுரை நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்
Updated on
2 min read

கஞ்சா வைத்திருந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண் காவலர்களை இழிவாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கோவை சைபர் கிரைம் போலீஸார் கடந்த 5ம் தேதி தேனியில் வைத்து யூடியூபர் சவுக்கு சங்கரை கைது செய்தனர். அப்போது அவரது காரில் ஆய்வு மேற்கொண்ட போது கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவர் மீது தேனி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக சென்னையில் உள்ள அவரது வீடு, அலுவலகம் ஆகியவற்றிலும் தேனி போலீஸார் சோதனை நடத்தியிருந்தனர்.

மதுரை நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர்
மதுரை நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர்

இதனிடையே கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கர் இந்த வழக்கு தொடர்பாக மதுரையில் உள்ள மாவட்ட போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. 2 நாட்கள் விசாரணை முடிந்து இன்று, மதுரை நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர், போலீஸாரால் ஆஜர்படுத்தப்பட்டார்.

மதுரை நீதிமன்ற வளாகம்
மதுரை நீதிமன்ற வளாகம்

அப்போது, போலீஸார் விசாரணையின் போது துன்புறுத்தினரா என நீதிபதி கேட்டதற்கு, தான் துன்புறுத்தப்படவில்லை என சவுக்கு சங்கர் பதிலளித்தார். இதையடுத்து அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சவுக்கு சங்கர் பெண் போலீஸார் பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதையும் வாசிக்கலாமே...


வங்கக்கடலில் புயல் சின்னம்... தேனி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கொட்டப் போகிறது கனமழை!

சோகம்... போலீஸ்காரருடன் தூக்கில் தொங்கிய இளம்பெண்!

காதலித்ததால் ஆத்திரம்... தங்கையை கோடாரியால் வெட்டிக்கொலை செய்த அண்ணன்கள்

மதுரை எய்ம்ஸ் திட்ட மதிப்பு... ரூ.1,978 கோடியிலிருந்து ரூ.2,021 கோடிகளாக உயர்வு!

உயர் தொழில்நுட்பம் படித்த தமிழர்களைக் குறிவைக்கும் வெளிநாட்டு மோசடிக் கும்பல்... கலெக்டர் எச்சரிக்கை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in