சவுக்கு சங்கருக்கு மே 28ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கர்
கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கர்

போலீஸ் காவல் முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கரை வரும் மே மாதம் 28ம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண் காவலர்களை இழிவாக பேசியது தொடர்பாக கைது செய்யப்பட்ட வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க கோரி கோவை 4வது குற்றவியல் நீதிமன்றத்தில் போலீஸார் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து அவர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கர்

அப்போது அவரை ஒருநாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து போலீஸார் அவரை தனி இடத்தில் வைத்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். நீதிமன்றம் அனுமதித்த கால அவகாசம் முடிவடைந்ததைத் தொடர்ந்து இன்று மீண்டும் அவர் கோவை 4வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு முன்னிலையில் போலீஸார் ஆஜர்படுத்தினர். அப்போது மே 28ம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

கோவை நீதிமன்ற வளாகம்
கோவை நீதிமன்ற வளாகம்

இதனிடையே தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சவுக்கு சங்கர் தாக்கல் செய்திருந்த மனு இன்று கோவையில் உள்ள 4வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை வருகிற மே 20ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு... மத்திய அரசு அறிவிப்பு!

கர்ப்பிணிகளுக்கான ஃபேஷன் ஷோ... ரேம்ப் வாக்கில் கலக்கிய அமலாபால்!

தனுஷை விட ஐஸ்வர்யா மோசம்; முன்னாள் கணவர் ஓரினச்சேர்க்கையாளர் ...பகீர் கிளப்பும் பாடகி சுசித்ரா!

அதிகரிக்கும் வெயில்; காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு கட்டுப்பாடு!

கோவையில் பரபரப்பு... பாலியல் வழக்கில் கைதான சிறுவன் தற்கொலை முயற்சி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in