பெண் காவலர்கள் என்னை தாக்கி புகைப்படம் எடுத்தனர்... நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

பெண் காவலர்கள் பாதுகாப்புடன் சவுக்கு சங்கர் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்
பெண் காவலர்கள் பாதுகாப்புடன் சவுக்கு சங்கர் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்

திருச்சிக்கு வாகனத்தில் அழைத்துச் சென்றபோது பெண் போலீஸார் தன்னை தாக்கி, அதனை புகைப்படம் எடுத்து வாட்ஸ் ஆப் குழுக்களில் பகிர்ந்ததாக சவுக்கு சங்கர் நீதிபதியிடம் புகார் தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண் காவலர்களை இழிவாக பேசிய விவகாரம் தொடர்பாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை சைபர் கிரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது சேலம், திருச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருச்சியில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக சவுக்கு சங்கரை நேரில் ஆஜர்படுத்த, திருச்சி போலீஸார் வாகனம் மூலம் கோவை மத்திய சிறையில் இருந்து சவுக்கு சங்கரை இன்று திருச்சிக்கு அழைத்து சென்றனர்.

திருச்சி நீதிமன்ற வளாகம்
திருச்சி நீதிமன்ற வளாகம்

10-க்கும் மேற்பட்ட பெண் காவலர்கள் புடை சூழ சவுக்கு சங்கர் போலீஸ் வாகனத்தில் அழைத்து வரப்பட்டார். திருச்சியிலும் ஏராளமான பெண் போலீஸார் மற்றும் 20க்கும் மேற்பட்ட ஆயுதப்படை பெண் போலீஸார் பாதுகாப்புடன் அவர், திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, திருச்சிக்கு அழைத்து வரும் வழியில் கரூர் அருகே உணவு வாங்கிக் கொடுக்க வாகனத்தை நிறுத்தியதாகவும், அப்போது தனது கண்ணாடியை கழற்றச் சொல்லி பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாகவும் நீதிபதி முன்னிலையில் சவுக்கு சங்கர் குற்றம் சாட்டினார்.

திருச்சி பெண் காவலர்கள் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்படும் சவுக்கு சங்கர்
திருச்சி பெண் காவலர்கள் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்படும் சவுக்கு சங்கர்

மேலும், தன்னை மன்னிப்புக் கோருமாறு கூறி வீடியோ எடுத்ததாகவும், தன்னை தாக்கிய புகைப்படங்களை காவலர்களின் செய்தி குழுக்களிலும் அவர்கள் பகிர்ந்ததாக அவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதையடுத்து அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் சவுக்கு சங்கர் பலத்த பாதுகாப்புடன் திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த சம்பவத்தால் திருச்சி நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

இதையும் வாசிக்கலாமே...


ஐபிஎல் சூதாட்ட கும்பல் சிக்கியது: இருவர் கைது; ரூ.2.47 லட்சம் பறிமுதல்!

வாக்களித்துவிட்டு ஊர் திரும்பியவர்களுக்கு நேர்ந்த சோகம்... விபத்தில் 6 பேர் பலி!

ஒருதலைக் காதலால் கர்நாடகாவில் அடுத்த பயங்கரம்... வீடு புகுந்து இளம்பெண் குத்திக் கொலை!

காதலனுக்காக வீட்டின் உரிமையாளரை கொலை செய்த இளம்பெண்... பெங்களூருவில் பரபரப்பு!

அதிர்ச்சி... நடிகை ராக்கி சாவந்த் மருத்துவமனையில் அனுமதி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in