ரோஹித் வெமுலா தற்கொலை வழக்கில் மீண்டும் விசாரணை... முதல்வர் ரேவந்த் ரெட்டி உறுதி

ரோஹித் வெமுலா - அஞ்சலி
ரோஹித் வெமுலா - அஞ்சலி

ரோஹித் வெமுலா தற்கொலை வழக்கினை தெலங்கானா போலீஸார் முடித்து வைத்தததை அடுத்து, மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டியை ரோஹித்தின் தாயார் இன்று சந்தித்து மகன் மரணம் தொடர்பாக நீதி கோரினார்.

ரோஹித் வெமுலாவின் தாயார் ராதிகா வெமுலா, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை இன்று நேரில் சந்தித்தார். ரோஹித் வெமுலா தற்கொலை வழக்கினை தெலங்கானா போலீஸார் முடித்து வைத்து, மாநில உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். ஆனால், அந்த விசாரணையில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என தெரிவித்த ரோஹித்தின் தாயார், மகனின் மரணம் தொடர்பாக மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்து நீதி கோரினார். முதல்வர் ரேவந்த் ரெட்டியும் ரோஹித் தற்கொலை தொர்பாக மீண்டும் விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்தார்.

முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் ராதிகா வெமுலா
முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் ராதிகா வெமுலா

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் பிஹெச்டி மாணவரான ரோஹித் வெமுலா 2016, ஜனவரி 17 அன்று தற்கொலை செய்துகொண்டார். பல்கலைக்கழக வளாகத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது நாட்டையே உலுக்கும் விவகாரமாக மாறியது. உயர்கல்வி நிலையங்கள் சாதிப் பாகுபாடுகள் தலைதூக்குவதாகவும், அதற்கு பட்டியலினத்தை சேர்ந்த ரோஹித் வெமுலா பலியாகி இருப்பதாகவும் பெரிதாக விவாதிக்கப்பட்டது.

ரோஹித் வெமுலா தற்கொலையின் பின்னணியில், அவர் சார்ந்திருந்த அம்பேத்கர் அமைப்புக்கும், பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபிக்கும் இடையிலான மோதலே காரணம் என்றும் சொல்லப்பட்டது. ஐஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிலையங்கள் சாதிப்பாகுபாடு காரணமாக மாணவர் தற்கொலைகள் அதிகரித்து வந்ததன் மத்தியில், ரோஹித் வெமுலாவின் தற்கொலை அரசியல் வட்டத்திலும் பெரும் விவாதத்தை கிளப்பியது.

இதற்கிடையே தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் நேற்றைய தினம் மாநில காவல்துறை சமர்பித்த அறிக்கை புதிய சர்ச்சையையும் கிளப்பி விட்டது. ’ரோஹித் வெமுலா அடிப்படையில் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் அல்ல. அவர் பெற்றிருக்கும் பட்டியல் சாதிக்கான சான்றிதழ் போலியானது. தான் பட்டியலினத்தை சேர்ந்தவர் அல்ல என்பது வெளியே தெரிய வந்தால், தனது முந்தைய பட்டங்கள் மற்றும் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்ற அச்சத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டார்’ என்று காவல்துறை அறிக்கை தெரிவித்துள்ளது.

இதனால் ரோஹித் வெமுலா தற்கொலையில் குற்றம்சாட்டப்பட்டிருந்த பாஜக முன்னாள் எம்பி பண்டரு தத்தாத்ரேயா, பல்கலை துணைவேந்தர் அப்பாராவ், எபிவிபி மாணவர் அமைப்பின் நிர்வாகிகள் உட்பட பலர் வழக்கிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர்.

ரோஹித் வெமுலாவுக்கான நீதிப் போராட்டத்தில் ராதிகா வெமுலா
ரோஹித் வெமுலாவுக்கான நீதிப் போராட்டத்தில் ராதிகா வெமுலா

ரோஹித் வெமுலா விவகாரத்தில் போலீஸாரின் விசாரணை மற்றும் வழக்கை முடித்து வைக்கும் அறிக்கையின் மீது ரோஹித் வெமுலாவின் தாயார் சந்தேகம் எழுப்பி உள்ளார். முன்னதாக இந்த வழக்கை மேலும் விசாரணை செய்வதாக தெலங்கானா டிஜிபி ரவி குப்தா ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த வழக்கை மேலதிக விசாரணைக்கு அனுமதிக்குமாறு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் நேற்றிரவு டிஜிபி தெரிவித்திருந்தார். தற்போது ரோஹித் வெமுலா வழக்கில் மீண்டும் விசாரணை நடத்த, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும் இன்று உறுதியளித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

ஜாக்கிரதை... இன்று அக்னி நட்சத்திரம் தொடக்கம்... 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகலாம்!

தேனியில் யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடியாக கைது... பெண் காவலர்கள் குறித்த அவதூறு பேசியதாக வழக்கு!

மாடியிலிருந்து வீசி எறிந்து பச்சிளம் குழந்தை கொலை... தாய் உள்ளிட்ட மூவர் கைது!

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வேன்... சிறுமி பலி.. 30 பேர் படுகாயம்!

கேரள ராணுவ அதிகாரியின் மகன் பெங்களூருவில் கடத்தல்... பணத்திற்காக நண்பர்கள் போட்ட பிளான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in