டிராவில் இருந்த ரூ.41 லட்சம் கொள்ளை; ஆயுதபூஜை முடிந்து அலுவலகத்துக்கு வந்த ஓனர் அதிர்ச்சி

டிராவில் இருந்த ரூ.41 லட்சம் கொள்ளை; ஆயுதபூஜை முடிந்து அலுவலகத்துக்கு வந்த ஓனர் அதிர்ச்சி

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் 41 லட்ச ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. ஆயுதபூஜை விடுமுறையில் அடையாளம் தெரியாத நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இது தொடர்பாக ஊழியர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலை 15வது அவென்யூ பகுதியில் வசிப்பவர் தொழிலதிபர் ஜேக்கப் (67). இவர் சொந்தமாக Chennai pen product (p) Ltd, southern scribe instrument (p) Ltd, southern writing instruments (p) Ltd, மற்றும் nellai concrete product and construction co (p) Ltd உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்நிறுவனங்களின் தலைமை அலுவலகம் சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள வணிக வளாகத்தில் இரண்டாவது தளத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 21ம் தேதி ஊழியர்கள் இந்த அலுவலகத்தில் ஆயுதபூஜை கொண்டாடி விட்டு இரவு அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.‌ இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு நேற்று மதியம் வழக்கம் போல் உரிமையாளர் ஜேக்கப் அலுவலகத்திற்கு வந்து தனது அறையில் உள்ள டிராவை திறந்து பார்த்த போது அதில் வைத்திருந்த 41 லட்ச ரூபாய் திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் ஜேக்கப் இது குறித்து கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஊழியர்கள் யாரோ இந்த திருட்டில் ஈடுப்பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து போலீஸார் ஊழியர்களிடம் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் எப்போதும் பரபரப்பாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் 41 லட்ச ரூபாய் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in