தாய் வீட்டுக்குச் சென்ற மேலாளர்... வீட்டில் புகுந்த கொள்ளையர்கள்; 55 சவரன் நகை, 2 லட்சத்துடன் ஓட்டம்!

தாய் வீட்டுக்குச் சென்ற மேலாளர்... வீட்டில் புகுந்த கொள்ளையர்கள்; 55 சவரன் நகை, 2 லட்சத்துடன் ஓட்டம்!

தனியார் நிறுவன மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து 55 சவரன், நகை இரண்டு லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. தீபாவளி அன்று பெரம்பூரில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றபோது கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள செம்பாக்கம் விஜிபி பொன்நகர் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி(53). இவர் ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 11ம் தேதி தீபாவளியை முன்னிட்டு சத்தியமூர்த்தி தனது குடும்பத்துடன் பெரம்பூரில் உள்ள அவரது அம்மா வீட்டிற்கு சென்று தீபாவளி பண்டிகையை கொண்டாடியுள்ளார்.

நேற்று இரவு சத்தியமூர்த்தி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடு பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 55 சவரன் நகை 2 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை போனது கண்டுஅதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுதொடர்பாக சத்தியமூர்த்தி சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தீபாவளி கொண்டாட தாய் வீட்டிற்கு சென்ற தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 55 சவரன் நகை, 2 லட்சம் பணம் கொள்ளைபோன சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in