அதிர்ச்சி... 10 மாதத்தில் ரூ.425 கோடியை இழந்த பொதுமக்கள்; பதறவைக்கும் சைபர் க்ரைம் மோசடி

சைபர் க்ரைம்
சைபர் க்ரைம்

தமிழகம் முழுவதும் கடந்த 10 மாதத்தில் மட்டும் சைபர் க்ரைம் மோசடிகளில் சிக்கி 425 கோடி ரூபாயை பொதுமக்கள் இழந்துள்ளதாக தமிழக சைபர் க்ரைம் போலீஸாரின் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளன.

நாளுக்கு நாள் சைபர் க்ரைம் குற்றங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை தடுக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் சைபர் குற்றவாளிகள் புதுப்புது வழிகளை கண்டுபிடித்து பொதுமக்களிடமிருந்து இருந்து நூதன முறையில் பணமோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக வங்கி அதிகாரி போல் பேசி மோசடி, விலையுயர்ந்த பொருள்களைக் பார்சலில் வந்திருப்பதாக கூறி மோசடி, ஆன்லைன் லோன் மோசடி என பலவகையான மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த 10 மாதங்களில் பல்வேறு சைபர் க்ரைம் மோசடியில் சிக்கி பொதுமக்கள் 425 கோடி ரூபாயை இழந்துள்ளதாக தமிழக சைபர் கடரைம் போலீஸார் தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் 65,426 சைபர் க்ரைம் புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும், 1930 என்ற உதவி எண் மூலமாக இந்தாண்டு மட்டும் 21,760 சைபர் க்ரைம் புகார் அழைப்புகள் வந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

பொதுமக்கள் இழுந்த 338 கோடி ரூபாயை வங்கி மூலமாக முடக்கி உரியவரிடம் திரும்ப ஒப்படைத்துள்ளதாகவும், சைபர் குற்றங்களில் ஈடுபட்டதாக 332 குற்றவாளிகளை கைது செய்துள்ளதாகவும், சைபர் க்ரைம் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டதாக கடந்த 1.4.2021ம் ஆண்டு முதல் 16.10.2023ம் ஆண்டு வரை 42 குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் அடைத்துள்ளதாகவும், அதுமட்டுமின்றி சட்டவிரோதமாக மோசடி செயலுக்கு பயன்படுத்திய 29,530 சிம்கார்டுகளை பிளாக் செய்துள்ளதாகவும் போலீஸார் கூறினர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in