பகீர் வீடியோ... மெட்ரோ ரயில் நிலைய சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலி; ரூ.25 லட்சம் இழப்பீடு அறிவிப்பு!

கோகுல்புரி மெட்ரோ ரயில் நிலைய சுவர் இடிந்தது
கோகுல்புரி மெட்ரோ ரயில் நிலைய சுவர் இடிந்தது

இன்று காலை டெல்லி கோகுல்புரி மெட்ரோ நிலையத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

டெல்லியில் பிங்க்லைனில் கோகுல்புரி மெட்ரோ நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தின் ஒரு பகுதி இன்று காலை 11 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. கோகுல்புரி மெட்ரோ ரயில் நிலையத்தின் கிழக்குப் பகுதியில் உயர்த்தப்பட்ட நடைமேடையின் எல்லைச் சுவர் இடிந்து கீழே உள்ள சாலையில் விழுந்தது. அப்போது அந்த வழியே வந்து கொண்டிருந்த ஒருவர் மீது சுவர் இடிபாடுகள் விழுந்தன. இதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்த போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதில், உயிரிழந்த நபர் கரவால் நகரில் வசிக்கும் வினோத்குமார் (53) என்பது தெரியவந்தது. மேலும், காஜியாபாத்தை சேர்ந்த அஜித்குமார் என்பவர், இருசக்கர வாகனத்தில் வந்தபோது அவர் மீதும் இடிபாடுகள் விழுந்து படுகாயமடைந்தார். மோனு, சந்தீப், முகமது தசீர் ஆகிய 3 பேரும் காயமடைந்தனர்.

மீட்பு பணி
மீட்பு பணி

இவர்கள் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கட்டிட இடிபாடுகள் விழுந்ததில் அந்த பகுதியின் கீழே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ரயில்வே துறையை சேர்ந்த மேலாளர், ஒரு இளநிலை பொறியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டிஎம்ஆர்சி) தெரிவித்துள்ளது.

மேலும், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. லேசான காயமடைந்தவருக்கு ரூ. 1 லட்சமும், படுகாயமடைந்தவருக்கு ரூ. 5 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என டெல்லி மெட்ரோ ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

அத்தை மகளை/மகனை திருமணம் செய்தால் தண்டனை... சர்ச்சையானது பொது சிவில் சட்டம்!

தமிழக அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பரபரப்பு தகவல்!

அண்ணாமலை அல்ல, அவரது அப்பனே வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது...கொந்தளித்த ஆர்.பி.உதயகுமார்!

நாளை தை அமாவாசை: பூக்களின் விலை கடும் உயர்வு... 1 கிலோ மல்லி ரூ.2,000/-க்கு விற்பனை!

அண்ணாமலை அவதூறு பேச்சு... உயர் நீதின்றம் அதிரடி உத்தரவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in