பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் திடீர் பரபரப்பு... வீடியோ ஆதாரம் நீதிமன்றத்தில் ஆய்வு!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேர் கோவை மகிளா நீதிமன்றத்தில் ஓராண்டுக்குப்பின் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பொள்ளாச்சி பாலியல் வழக்கிற்காக தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறையில் மகளிர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக குற்றம் சாட்டப்பட்டு சேலம் நீதிமன்றத்தில் அடைக்கப்பட்டிருந்தவர்கள் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தனர். நீண்ட மாதங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் இன்று நேரடியாக ஆஜர்படுத்தப்பட்டனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

அப்போது, பாலியல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் உள்ள வீடியோக்களை வழக்கறிஞர் முன்னிலையில் ஒளிபரப்பு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் பரபரப்பு ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கினை முதலில் கோவை மாவட்ட போலீஸாரும் பின்னர் சிபிசிஐடி காவல்துறையினரும் விசாரணை செய்தனர்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களின் அரசியல் பின்னணி காரணமாக முறையாக விசாரணை நடத்த தொடர்ந்து கோரிக்கை விடப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரி ராஜன், மணிவண்ணன், பாபு, அருளானந்தம், அருண்குமார், ஹெரன்பால் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்

கடந்த 2019-ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தயார் செய்து கோவை மகிளா நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தது. இந்த வழக்கை விரைந்து விசாரிக்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. கடந்த 2021-ம் ஆண்டு 9 பேர் மீதும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை, கூட்டுச்சதி, மானபங்கம் செய்தல், பெண்கள் கடத்தல், ஆபாச வீடியோ பரப்புதல், தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துங்கள் உள்ளிட்ட 10 சட்டப் பிரிவுகளில் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. பரபரப்பான இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதால் நீதிமன்ற வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதையும் வாசிக்கலாமே...


நாளை மாசி மகம்: இல்லத்தில் தனம் பெருக இதை தானம் பண்ணுங்க!

விடாது துரத்திய விபத்து... தெலங்கானாவில் பெண் எம்எல்ஏ பலி!

அதிகாலையில் அதிர்ச்சி... முன்னாள் முதல்வர் காலமானார்!

லாட்டரியில் ரூ.1,00,00,000 பரிசு... பழநிக்கு பாதயாத்திரை சென்ற கேரள பக்தருக்கு அதிர்ஷ்டம்!

ராமேஸ்வரத்தில் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in