கோவா மாநில ஆளுநர் ஸ்ரீதரன் பிள்ளை
கோவா மாநில ஆளுநர் ஸ்ரீதரன் பிள்ளை

ஆளுநரின் கான்வாயில் புகுந்த கார்... ஆளும்கட்சி நிர்வாகியின் மகன் என்பதால் வழக்குப் பதிய மறுத்த போலீஸார்!

கோவா ஆளுநரின் கான்வாய்க்குள் புகுந்த காரை ஓட்டி வந்தது, சிபிஎம் நிர்வாகியின் மகன் என்பதால் போலீஸார் வழக்குப்பதியாமல் விடுவித்துள்ள சம்பவம் கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதரன் பிள்ளை கோவா ஆளுநராக பதவி வகித்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கோழிக்கோடு பேப்பூர் சாலையில் நிகழ்ச்சி ஒன்றிற்காக ஆளுநரின் கார் உட்பட பாதுகாப்பு வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. ஆளுநருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதால், அவரது கான்வாய் முடியும் வரை பிற வாகனங்களை போலீஸார் தடுத்து நிறுத்தி இருந்தனர்.

கான்வாயில் புகுந்ததாக கைது செய்யப்பட்ட ஜூலியஸ்
கான்வாயில் புகுந்ததாக கைது செய்யப்பட்ட ஜூலியஸ்

அப்போது அவ்வழியே வந்த கார் ஒன்று திடீரென ஆளுநரின் கான்வாய்க்குள் திடீரென புகுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆளுநரின் பாதுகாப்பு படையினர், உடனடியாக அந்த காரை தடுத்து நிறுத்திய போது, காரில் இருந்த ஜூலியஸ் என்ற நபர் அவர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் காரை பின்னோக்கி நகர்த்த அவர் மறுப்பு தெரிவித்ததால், பாதுகாப்பு படையினர் அவரை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்துவிட்டு, காரை பின்னோக்கி நகர்த்தினர். இதையடுத்து மீண்டும் கான்வாய் தொடர்ந்தது.

சிபிஎம் மாவட்ட செயலாளர் மோகன், முன்னாள் எம்.எல்.ஏ., லத்திகா தம்பதி
சிபிஎம் மாவட்ட செயலாளர் மோகன், முன்னாள் எம்.எல்.ஏ., லத்திகா தம்பதி

இந்த நிலையில் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜூலியஸிடம் விசாரணை நடத்தியதில், அவர் கோழிக்கோடு மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மோகனன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லத்திகா ஆகியோரின் மகன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் மட்டும் விதித்து போலீஸார் அவரை விடுவித்துள்ளனர். அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

இதனிடையே ஆளுநரின் கான்வாயில் கார் ஒன்று நுழைந்தது பாதுகாப்பு குறைபாடு என குற்றச்சாட்டு எழுந்ததால், இது தொடர்பாக கோழிக்கோடு நகர காவல் ஆணையர் ராஜ்பால் மீனாவிடம், காவல்துறை சிறப்பு பிரிவினர் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருந்தனர். இந்த சம்பவத்தில், சிபிஎம் மாவட்ட செயலாளரின் மகன் என்பதால் ஜூலியஸ் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ள பாஜக, அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

தற்போது இந்த சம்பவம் கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஆளுநர் முகமது ஆரிஃப் கானுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வரும் நிலையில், தற்போது நடைபெற்றுள்ள இந்த சம்பவம் கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

நடிகர் விஜய்க்கு ரஜினிகாந்த் திடீர் வாழ்த்து!

முன்கூட்டியே நடக்கிறது பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள்... தேர்தலையொட்டி அரசு அறிவிப்பு!

பேரிடர் நிவாரண நிதி வழங்குவதில் பாரபட்சம்... மக்களவையில் ஆ.ராசா குற்றச்சாட்டு!

பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து; தீப்பிழம்பான நகரம்... 6 பேர் பலி, 60 பேர் படுகாயம்!

டெஸ்ட் போட்டி.... இந்திய கிரிக்கெட் அணி புதிய சாதனை!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in