ஜி பே எண் கொடுத்து லஞ்சம் கேட்ட போலீஸ்காரர்கள்... கார் உரிமையாளர் புகாரால் பரபரப்பு!

ஜி பே எண் கொடுத்து லஞ்சம் கேட்ட போலீஸ்காரர்கள்... கார் உரிமையாளர் புகாரால் பரபரப்பு!

காரில் உறங்கிக் கொண்டிருந்தவரை எழுப்பி மிரட்டி இரண்டு போலீஸ்காரர்கள் பணம் பறித்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா தலைநகரான பெங்களூருவில் காரில் இனி உறங்க முடியுமா என அதன் உரிமையாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அதற்குக் காரணம், போலீஸாரின் பணம் பறிப்பு நடவடிக்கை தான் என்று புகார் கூறுகின்றனர். பெங்களூருவில் அப்படி என்னதான் நடந்தது?

தலக்கட்டாப்பூரா காவல் நிலையம்
தலக்கட்டாப்பூரா காவல் நிலையம்

பெங்களூருவில் உள்ள தலக்கட்டாப்பூரா காவல் நிலைய எல்லையில் ஒருவர் தனது காரை நிறுத்திவிட்டு அதில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மகாதேவ் நாயக் மற்றும் அஞ்சனப்பா என்ற போலீஸ்காரர்கள், காரை சோதனை செய்ய வேண்டும் என்று கூறி அந்த நபரை எழுப்பினர். இதனால் அவர் காரை சோதனையிட அனுமதித்தார். போலீஸார், அந்த காரை சோதனை செய்தனர்.

அப்போது காரில் ​ஒரு இ-சிகரெட் (வேஃபர்) கண்டுபிடிக்கப்பட்டது. இ-சிகரெட் வைத்திருந்தால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று கார் உரிமையாளர்களிடம் மகாதேவ் நாயக் மற்றும் அஞ்சனப்பா கேட்டுள்ளனர். சம்பவ இடத்திலேயே 50 ஆயிரம் ரூபாயைக் கட்ட வேண்டும் என்றனர். இல்லாவிட்டால் வாகனத்தை விட முடியாது என்று கறாராக பேசியுள்ளனர். தற்போது என்னிடம் கையில் பணமில்லை என்று கார் உரிமையாளர் கூறியுள்ளார்.

ஆனால், தெரிந்தவர்களிடம் பணம் பெற்று தருமாறு, அந்த இரண்டு போலீஸாரும் கண்டிப்புடன் கூறியுள்ளனர். இறுதியாக அவர்களிடம் ரூ.5 ஆயிரத்தை கார் உரிமையாளர் கொடுத்தார். மீதமுள்ள பணத்தைக் கட்ட வேண்டும் என்று அஞ்சனப்பா மற்றும் மகாதேவ் நாயக் ஆகியோர் வலியுறுத்தினர்.

அத்துடன் காரில் இருந்த இ- சிகரெட்டையும், ஆயிரம் ரூபாயையும் எடுத்துக் கொண்டனர். மேலும், சம்பளம் பெற்றதும் பணம் அனுப்ப ஜி பே எண்ணையும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த ஆடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தலக்கட்டாப்பூரா போலீஸார் தனது காரை சோதனையிட்டு மிரட்டி பணம் பறித்ததாக ஒருவர் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் கர்நாடகாவில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

ஜாக்கிரதை... இன்று அக்னி நட்சத்திரம் தொடக்கம்... 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகலாம்!

தேனியில் யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடியாக கைது... பெண் காவலர்கள் குறித்த அவதூறு பேசியதாக வழக்கு!

மாடியிலிருந்து வீசி எறிந்து பச்சிளம் குழந்தை கொலை... தாய் உள்ளிட்ட மூவர் கைது!

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வேன்... சிறுமி பலி.. 30 பேர் படுகாயம்!

கேரள ராணுவ அதிகாரியின் மகன் பெங்களூருவில் கடத்தல்... பணத்திற்காக நண்பர்கள் போட்ட பிளான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in