உடுமலையில் 17 வயது சிறுமி கர்ப்பம்... 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் போக்சோவில் கைது

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

பொள்ளாச்சி அருகே உடுமலையில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 3 சிறுவர்கள் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம், அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த 17 வயது சிறுமி, பெற்றோர் இல்லாததால் தனது தாத்தா பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாக வாந்தியும், மயக்கமுமாக இருந்துள்ளது. இதனால், சந்தேகமடைந்த பாட்டி, சிறுமியை அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்துள்ளார். அப்போது சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து சிறுமியை விசாரித்தபோது 3 சிறுவர்கள் உட்பட 9 பேர், தன்னை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறியுள்ளார். இதை அடுத்து உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் பேரில் இந்த பாலியல் புகார் தொடர்பாக, உடுமலை பகுதியை சேர்ந்த ஜெய காளீஸ்வரன் (19), மதன்குமார் (19), பரணி குமார் (21), பிரகாஷ் (24), நந்தகோபால் (19), பவா பாரதி (22) மற்றும், 14, 15. மற்றும் 16 வயதுடைய 3 சிறுவர்கள் என மொத்தம் ஒன்பது பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.

உடுமலை காவல் நிலையம்
உடுமலை காவல் நிலையம்

அடுத்து, இவர்கள் அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையே கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், உரிய விசாரணை செய்யுமாறு உடுமலை டிஎஸ்பி அலுவலகத்தின் முன்பு திரண்டனர்.

உரிய விசாரணைக்கு பின்னரே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறும் போலீசார் தெரிவித்ததை அடுத்து உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 17 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...
குருத்வாராவில் சீக்கிய தலைப்பாகை அணிந்து உணவுப் பரிமாறிய பிரதமர் மோடி!

திமுக எம்எல்ஏவின் மருமகன் வெட்டிக்கொலை.... தஞ்சையில் பயங்கரம்

தெற்கு பிரேசிலில் பலத்த மழை: ஆறுகளில் வெள்ளப் பெருக்கு; 145 பேர் உயிரிழப்பு

ஜிவி பிரகாஷ் விவாகரத்து சர்ச்சை... சைந்தவி ரியாக்‌ஷன் என்ன?

காதலி கண்முன்னே பயங்கரம்... பைக்கில் சென்ற கல்லூரி மாணவன் வெட்டிக்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in