தண்டனை அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் நீதிமன்றத்திலிருந்து போக்சோ கைதி தப்பி ஓட்டம்

வழக்கு விசாரணை
வழக்கு விசாரணை

ராஜஸ்தானின் அல்வாரில் உள்ள நீதிமன்றத்தில் போக்சோ வழக்கில், தண்டனை அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் குற்றவாளி தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் நீதிமன்றத்தில் மணீஷ் (29) என்பவர் மீதான போக்சோ (சிறார்கள் மீதான பாலியல் தொந்தரவு) வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. மணீஷ் மீது போலீஸார் ஐபிசி பிரிவுகள் 354, 354 டி, 452, 506 மற்றும் போக்சோ பிரிவு 7/8 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர். வழக்கு விசாரணையில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நீதிமன்றம் மணீஷுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்தது.

கைது
கைது

இந்நிலையில் தண்டனையை கேட்டு அதிர்ச்சி அடைந்த கைதி மணீஷ், தீர்ப்பு அறிவிக்கப்பட்டவுடன், நீதிமன்றத்திலிருந்த கூட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து நீதிமன்ற பணியாளர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த குற்றவாளிக்கு சிறைக் காவலர்களோ, போலீஸ் பணியாளர்களோ இல்லை. அவர் தங்கள் வழக்கறிஞருடன் நீதிமன்றத்தில் ஆஜராகினார். தண்டனை அறிவிக்கப்பட்ட பிறகு வழக்கறிஞர் மற்ற வேலைகளில் மும்முரமாக இருந்தார்.

போக்சோ வழக்கு
போக்சோ வழக்கு

நீதிமன்ற வளாகத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்திலிருந்து தப்பினார். நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்து அவரை தேடி வருகிறோம். விரைவில் அவர் கைது செய்யப்படுவார்" என்றார்.

இதையும் வாசிக்கலாமே...


ஐபிஎல் சூதாட்ட கும்பல் சிக்கியது: இருவர் கைது; ரூ.2.47 லட்சம் பறிமுதல்!

வாக்களித்துவிட்டு ஊர் திரும்பியவர்களுக்கு நேர்ந்த சோகம்... விபத்தில் 6 பேர் பலி!

ஒருதலைக் காதலால் கர்நாடகாவில் அடுத்த பயங்கரம்... வீடு புகுந்து இளம்பெண் குத்திக் கொலை!

காதலனுக்காக வீட்டின் உரிமையாளரை கொலை செய்த இளம்பெண்... பெங்களூருவில் பரபரப்பு!

அதிர்ச்சி... நடிகை ராக்கி சாவந்த் மருத்துவமனையில் அனுமதி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in