பஞ்சாயத்து அலுவலகத்தில் நடந்த ஏடாகூடம்... பெண் ஊழியரை ஆபாச புகைப்படம் எடுத்த பில் கலெக்டர் கைது!

பெண் ஊழியருடன் நெருக்கமாக இருக்கும் பில் கலெக்டர் அர்ஜுன் ஹரிகிருஷ்ணா.
பெண் ஊழியருடன் நெருக்கமாக இருக்கும் பில் கலெக்டர் அர்ஜுன் ஹரிகிருஷ்ணா.

அலுவலக பெண் ஊழியரை மிரட்டி அந்தரங்க புகைப்படம் எடுத்ததாக பில் கலெக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் கோலார் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், ஹாசன் மக்களவை தொகுதி ஜேடிஎஸ் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ வழக்கு பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், கோலார் மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியருடன் பில் கலெக்டர் ஒருவர் ரொமான்ஸ் செய்த புகைப்படங்கள் தீயாக பரவி வருகிறது.

கோலார் மாவட்டம், கேஜிஎப் ராமசாகர் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியருடன் நெருக்கமாக இருந்ததைப் போட்டோ எடுத்து மிரட்டியதாக பில் கலெக்டர் அர்ஜுன் ஹரிகிருஷ்ணாவை பெத்தமங்களா போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக பெத்தமங்களா காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்திருந்தார். கிராம பஞ்சாயத்து அலுவலகத்தின் முதல் மாடி அறையில் உள்ள சிசிடிவியை துண்டித்து விட்டு அங்கு செல்போனை வைத்து பெண் ஊழியருடன் நெருக்கமாக இருந்தை பில் கலெக்டர்அர்ஜுன் ஹரிகிருஷ்ணா படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், " குற்றம் சாட்டப்பட்ட அர்ஜுன் ஹரிகிருஷ்ணா கிராம பஞ்சாயத்து அலுவலகத்தின் முதல் தளத்திற்கு வந்து பாலியல் தொல்லை கொடுத்தார். நீங்கள் ஒத்துழைத்தால், உங்கள் கணவருக்கு கிராம பஞ்சாயத்தில் வாட்டர்மேன் வேலை தருகிறேன். அத்துடன் நீங்கள் வசிக்க பஞ்சாயத்தில் இருந்து இலவச அரசு வீடு கட்டித் தருகிறேன் என்று ஆசைவார்த்தை கூறினார்.

அத்துடன் என்னைக் கட்டாயப்படுத்தி முத்தமிடுமாறு வற்புறுத்தி செல்ஃபி புகைப்படம் எடுத்தார். இதன்பின் பாலியல் உறவுக்கு அழைத்தார். அப்பபடி வராவிட்டால், பணிநீக்கம் செய்து விடுவேன் என்று மிரட்டியதுடன், முத்தமிடும் புகைப்படத்தை வைரலாக்குவேன் என்று மிரட்டினார். அவர் கொடுத்த தொல்லையால் என் குடும்ப வாழ்க்கை சீரழிந்து விட்டது" என்று கண்ணீருடன் கூறினார்.

இதுதொடர்பாக அவருக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் (உடல் ரீதியான துன்புறுத்தல்), பணியிடத்தில் பெண்ணுக்கு அவமானம், தனிப்பட்ட தருணங்களில் புகைப்படங்களைப் பகிர்தல் மற்றும மிரட்டல் என பெண் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் பில் கலெக்டர்அர்ஜுன் ஹரிகிருஷ்ணாவை கைது செய்யச் சென்றனர்.

அப்போது அவரது தாய், போலீஸாரை கைது செய்யவிடாமல் தடுப்பதற்காக ஜீப் முன் படுத்து போராட்டம் நடத்தினார். அவரை அப்புறப்படுத்திய போலீஸார், அதன்பின் அர்ஜுன் ஹரிகிருஷ்ணாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி ராமசாகர் கிராம பஞ்சாயத்தைச் சேர்ந்த 14 பேர், தாலுகா ஊராட்சி செயல் அலுவலர் மஞ்சுநாத் ஹர்தியிடம் நேற்று மனு அளித்தனர்.

இதையடுத்து குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் பாதிக்கப்பட்டவரை பணியில் இருந்து இடைநீக்கம் செய்ய கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் ஊராட்சி வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளதாக ஹர்தி கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் லட்சுமிநாராயணன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார். இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


ஐபிஎல் சூதாட்ட கும்பல் சிக்கியது: இருவர் கைது; ரூ.2.47 லட்சம் பறிமுதல்!

வாக்களித்துவிட்டு ஊர் திரும்பியவர்களுக்கு நேர்ந்த சோகம்... விபத்தில் 6 பேர் பலி!

ஒருதலைக் காதலால் கர்நாடகாவில் அடுத்த பயங்கரம்... வீடு புகுந்து இளம்பெண் குத்திக் கொலை!

காதலனுக்காக வீட்டின் உரிமையாளரை கொலை செய்த இளம்பெண்... பெங்களூருவில் பரபரப்பு!

அதிர்ச்சி... நடிகை ராக்கி சாவந்த் மருத்துவமனையில் அனுமதி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in