பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு சோதனை
பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு சோதனை

குஜராத் பள்ளிகளுக்கான வெடிகுண்டு மிரட்டல் பின்னணியில் பாகிஸ்தான்... போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் பாகிஸ்தான் தொடர்பு வெளிப்பட்டுள்ளதாக காவல்துறை விசாரணை தெரிவிக்கிறது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், மக்களவைத் தேர்தல் வாக்களிப்புக்கு ஒருநாள் முன்னதாக மே 6 அன்று, 14க்கும் மேலான பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் தாங்கிய மின்னஞ்சல்கள் வந்தன. இதனையடுத்து காவல்துறை உஷார் படுத்தப்பட்டது. வெடிகுண்டு சிறப்பு பிரிவு போலீஸார் மற்றும் மோப்ப நாய் உட்பட, காவல்துறையினர் முழுமையான சோதனைகளை மேற்கொண்டனர். இதனையடுத்து எந்தவொரு பள்ளியிலும் சந்தேகத்திற்கிடமான வெடிபொருட்கள் கண்டுபிடிக்கவில்லை.

 வெடிகுண்டு ஆய்வு குழு வாகனம்
வெடிகுண்டு ஆய்வு குழு வாகனம்

குருகுலத்தில் உள்ள ஆசியா பள்ளி, தல்தேஜில் உள்ள ஆனந்த் நிகேதன், டெல்லி பப்ளிக் பள்ளி போபால், மேம்நகரில் உள்ள ஹெச்பிகே பள்ளி, தல்தேஜில் உள்ள ஜெபார் பள்ளி, எஸ்ஜி சாலையில் உள்ள காஸ்மோஸ் கேஸில் இன்டர்நேஷனல் பள்ளி மற்றும் இரண்டு கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆகியவை வெடிகுண்டு அச்சுறுத்தல் மெயில்களைப் பெற்ற சில பள்ளிகளில் அடங்கும். ஆனால் எந்த பள்ளியிலும் வெடிகுண்டு மிரட்டலுக்கு சாத்தியமான தடயங்கள் ஏதும் கிடைக்கவில்லை.

இவற்றில் குறிப்பிட்ட சில பள்ளிகள் நடந்து வரும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குச் சாவடிகளாகவும் செயல்பட்டன. எனவே தேர்தல் பணிகளை சீர்குலைக்கும் நோக்கில் இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதா எனவும் போலீஸார் விசாரணையை தொடர்ந்தனர். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா என நாட்டின் 2 முக்கியத் தலைவர்கள் வாக்களிக்க வருவதை முன்னிட்டு, குஜராத் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்திருக்கலாம் எனவும் போலீஸார் சந்தேகித்தனர்.

மோடி - அமித் ஷா
மோடி - அமித் ஷா

டெல்லி மற்றும் அண்டை நகரங்களில் உள்ள 100-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு குஜராத் சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் இந்த மிரட்டல் மின்னஞ்சல்களை புரளி என தெரிவித்தது. அத்துறை சார்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட அறிக்கை இதனை தெரிவித்தது. எனினும் அகமதாபாத் போலீஸார் தொடர்ந்த விசாரணையில் புதிய தகவல்கள் கிடைத்தன.

மிரட்டல் மின்னஞ்சல்கள் ரஷ்ய டொமைனில் இருந்து, குறிப்பாக tauheedl@mail.ru என்ற மின்னஞ்சல் முகவரியிலிருந்து வந்தவை என்பது கண்டறியப்பட்டது. “தொடர் விசாரணையில் பாகிஸ்தானில் உள்ள ராணுவத்துடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அகமதாபாத் குற்றப்பிரிவு காவல்துறை இணை ஆணையர் ஷரத் சிங்கால், ”இந்த மின்னஞ்சல்கள் தோஹிக் லியாகத் என்ற நபருடன் தொடர்புடையவை” என அறிவித்திருந்தார். பல்வேறு குற்றப்பின்னணி உடைய நபராக அறியப்பெறும் அந்த நபரின் மேலதிக விவரங்களை பொலீஸார் விசாரித்து வருகின்றனர்,

இதையும் வாசிக்கலாமே...

பத்ம விருது பெற்றவர்களுக்கு ராஜ உபசரிப்பு... இரவு விருந்தளித்த அமைச்சர் அமித் ஷா!

கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு... அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!

நீட் தேர்வு முறைகேடு: பள்ளி ஆசிரியர் உள்பட 3 பேர் மீது வழக்கு!

494 மதிப்பெண்கள் எடுத்த மாணவர் தற்கொலை... மதிப்பெண்கள் குறைந்ததாக விபரீதம்!

பிகினி உடையில் ‘கங்குவா’ நாயகி... தெறிக்க விடும் நெட்டிசன்கள்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in