பேரனுக்கு வைத்த குறியில் சிக்கிய பாட்டி... கண்டம் துண்டமாக வெட்டிக்கொலை செய்த கும்பல்!

கொலை செய்யப்பட்ட பாக்கியம்
கொலை செய்யப்பட்ட பாக்கியம்

எண்ணூரில் வீட்டு வாசலில் அமர்ந்திருந்த மூதாட்டியை பைக்கில் வந்த மர்ம நபர்கள் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை எண்ணூர் சத்தியவாணி முத்து நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியம் (65). இவர் வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். நேற்று இரவு பாக்கியம் தனது வீட்டு வாசலில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மூன்று பேர் பாக்கியத்தை சரமாரி அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றனர்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பாக்கியத்தின் உறவினர்கள், உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி பாக்கியம் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து பாக்கியத்தின் மருமகள் சுகுணா, எண்ணூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் . முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட பாக்கியத்திற்கு மகி(30) என்ற பேரன் உள்ளதும், அவர் மீது பத்துக்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது.

மேலும் மகி தனது நண்பர்களான சந்தோஷ்குமார், விக்னேஷ் ஆகியோருடன் சேர்ந்து கடந்த மாதம் எண்ணூர் பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தம் என்பவரை காதல் விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் சரமாரி வெட்டியுள்ளார். இதில் காயமடைந்த ஜீவானந்தம், காவல் நிலையத்தில் புகார் அளித்ததார். இதன் பேரில் போலீஸார் மகி உட்பட மூன்று பேரு கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கடந்த வாரம் மகி சிறையில் இருந்து ஜாமீனின் வெளி வந்ததை தெரிந்து கொண்ட ஜீவானந்தம் அவரை பழி தீர்க்க எண்ணினார். அதன்படி நேற்று இரவு தனது நண்பர்களுடன் ஜீவானந்தம் மகி வீட்டிற்கு சென்று அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அப்போது அங்கு மகி இல்லாததால் அவரது பாட்டி பாக்கியத்திடம் மகி குறித்து கேட்டுள்ளார்.

அப்போது அவர் அதற்குப் பதில் தெரிவிக்காததால், ஆத்திரமடைந்த ஜீவானந்தம் தனது நண்பர்களுடன் சேர்ந்து மூதாட்டியை கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து போலீஸார் தலைமறைவான மூன்று பேரை தனிப்படை அமைத்து வைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். கொலையாளிகளை கைது செய்து விசாரணை நடத்திய பின்னரே பாக்கியம் கொலைக்கான காரணம் தெரிய வரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

சவுக்கு சங்கர் உயிருக்கு ஆபத்து... வக்கீல் பரபரப்பு பேட்டி!

திடீர் பரபரப்பு... தொழில்நுட்ப கோளாறால் சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் கடைசி நேரத்தில் ஒத்தி வைப்பு!

அதிர்ச்சி... பல்கலைக்கழக தண்ணீர் தொட்டியில் இளம்பெண் சடலம்!

காலாவதியான பீர் குடித்த இருவருக்கு உடல்நலக்குறைபாடு... டாஸ்மாக் நிர்வாகம் அலட்சியம்!

பகீர் வீடியோ... 15வது மாடியில் இருந்து குதித்து மருத்துவமனை ஊழியர் தற்கொலை! பெற்றோர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in