குறும்பட இயக்குநர் வீட்டில் என்ஐஏ சோதனை: மாவோயிஸ்ட் தொடர்பான வழக்கால் பரபரப்பு!

என்ஐஏ சோதனை
என்ஐஏ சோதனை

சென்னையில் உள்ள கொரட்டூரில் குறும்பட இயக்குநர் முகில் சந்திரா வீட்டில் ஹைதராபாத்தைச் சேர்ந்த என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

என்ஐஏ சோதனை
என்ஐஏ சோதனை

ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் முகில் சந்திரா. குறும்பட இயக்குநரான இவர் சென்னை கொரட்டூர் ரெட்டேரி கேனல் ரோடு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இன்று காலை இவரது வீட்டிற்கு தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் என்ஐஏ அதிகாரிகள் வந்தனர். முகில் சந்திரா வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மாவோயிஸ்ட் வழக்குத் தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சோதனை முடிந்த பிறகே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவல் தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறும்பட இயக்குநர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று விசாரிக்கிறார்!

இலங்கை கடற்படை அட்டூழியம் தொடர்கிறது... தமிழக மீனவர்கள் 19 பேர் கைது!

8-ம் வகுப்பு படித்தவர்களுக்கு சுகாதாரத்துறையில் வேலை: பிப்.22 வரை விண்ணப்பிக்கலாம்!

நடிப்பை உதறித் தள்ளி புத்த மதத்தைத் தழுவிய நடிகை... ரசிகர்கள் அதிர்ச்சி!

கணவரைப் பிரிந்தார் சூர்யா பட நடிகை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in