குர்பத்வந்த் சிங் பன்னுன்... காலிஸ்தான் பயங்கரவாதிக்கு எதிராக சாட்டையை சொடுக்கும் என்ஐஏ

குர்பத்வந்த் சிங் பன்னுன்
குர்பத்வந்த் சிங் பன்னுன்

காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதியான குர்பத்வந்த் சிங் பன்னுன் என்ற கனடா வாழ் சீக்கியருக்கு எதிரான, தொடர் நடவடிக்கையின் அடுத்த கட்டத்துக்கு தேசிய புலானாய்வு முகமையான என்ஐஏ இன்று பாய்ச்சல் காட்டியுள்ளது.

’சீக்கியருக்கான நீதி’ என்ற காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் நிறுவனராக அறியப்படும் குர்பத்வந்த், தொடர்ந்து இந்தியாவுக்கும் இந்தியர்களுக்கும் எதிராக தீவிரவாத மிரட்டல்களை விடுத்து வருகிறார். நவ.4 அன்று அவர் வெளியிட்ட ஒரு வீடியோவில்,’ஏர் இந்தியா விமானங்களில் இனிமேல் சீக்கியர்கள் ஏற வேண்டாம் என்றும், அவ்வாறு செய்தால் அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும்’ என்றும் தெரிவித்தார்.

ஏர் இந்தியா விமானம்
ஏர் இந்தியா விமானம்

ஏர் இந்தியா விமானங்களின் பாதுகாப்புக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை இந்தியாவும் பொறுப்பாக கையாண்டது. இந்தியாவிலும், கனடா உள்ளிட்ட இதர நாடுகளிலும் ஏர் இந்தியா போக்குவரத்து மற்றும் விமான பாதுகாப்பில் கூடுதல் அடுக்கிலான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து நவ.19 நாளினைக் குறிப்பிட்டு, அன்றைய தினம் டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் அடைக்கப்படும்’ என்று மிரட்டல் விடுத்தார்.

முன்னதாக உள்துறை அமைச்சகம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் ’ஊபா’வின் கீழ் பன்னுனின் சீக்கியருக்கான நீதி அமைப்பை தடை செய்தது. மேலும் பன்னுனை 'தனிப்பட்ட பயங்கரவாதி' என்றும் மத்திய அரசு பட்டியலிட்டது.

என்ஐஏ
என்ஐஏ

அடுத்தக்கட்டமாக பஞ்சாப் அமிர்தசரஸில் இருக்கும் பன்னுனின் சொத்துக்களை என்ஐஏ பறிமுதல் செய்தது. என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தால் ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இத்துடன் 'பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி' என்ற பிரதான பட்டியலிலும் பன்னுன் சேர்க்கப்பட்டார்.

இந்த வரிசையில், ஏர் இந்தியா விமானத்தில் பறக்கும் பயணிகளுக்கான மிரட்டல் வீடியோ வழக்கில் குர்பத்வந்த் சிங் பன்னுன் மீது என்ஐஏ இன்று வழக்குப் பதிவு செய்துள்ளது. இதன்படி பன்னுன் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 120பி, 153 ஏ, 506 மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குகள் பதியப்பட்டன.

இதையும் வாசிக்கலாமே...

சேலையில் ஒய்யாரமாய் வலம் வரும் பிரபல நடிகை

உஷார்... சிக்கன் பிரியாணியால் சுயநினைவை இழந்த 3 பேர்!

மணி ரத்னத்தால வாழ்க்கையே போச்சு.. நாசம் பண்ணிட்டார்... பொதுவெளியில் புலம்பிய பிரபலம்!

கொதிக்கும் சாம்பாரில் தவறி விழுந்த 2ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

புகார்கொடுக்கவந்தசிறுமியைசீரழித்தஉதவிஆய்வாளர்கைது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in