மனைவி பிரிந்த சோகம்... தேசிய கபடி வீரர் தூக்கிட்டு தற்கொலை: திருமணமான ஒரே மாதத்தில் எடுத்த விபரீத முடிவு!

மனைவியுடன் வினோத் ராஜ் அரஸ்
மனைவியுடன் வினோத் ராஜ் அரஸ்

காதல் திருமணமான ஒரே மாதத்தில் மனைவி பிரிந்து சென்ற துயரம் தாங்காமல் தேசிய கபடி வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய கபடி வீரரான வினோத் ராஜ் அர்ஸ்.
தேசிய கபடி வீரரான வினோத் ராஜ் அர்ஸ்.

கர்நாடகா மாநிலம், சிக்கமகளூரு தாலுகா தேகுரு கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத் ராஜ் அரஸ். தேசிய கபடி வீரரான வினோத் இரண்டு ஆண்டுகளாக ஒரு பெண்ணைக் காதலித்த வந்தார். இந்த நிலையில், கடந்த 2023 டிசம்பர் 10-ம் தேதி அந்த பெண்ணையே வினோத் ராஜ் அரஸ் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் டிச.31-ம் தேதி வினோத்தை விட்டு அவரது மனைவி பிரிந்துள்ளார். இதனால் வினோத் மனமுடைந்தார்.

இந்த சம்பவம் குறித்து டிச.31-ம் தேதி மகிளா காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அப்போது விசாரணையில் வினாத் ராஜ் அரஸ் திருமணத்தில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மனைவி பிரிந்த சோகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வினோத் ராஜ் அரஸ் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதையடுத்து அவர் மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதல் திருமணம் செய்த மனைவி ஒரே மாதத்தில் பிரிந்த சோகம் தாளாமல் தேசிய கபடி வீரர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

'கை'விடப்படும் ஜோதிமணி; கரூரில் களம் காண்கிறாரா அமைச்சரின் மனைவி?

இரட்டை இலை சின்னம் முடங்கும்... அதிமுக முன்னாள் அமைச்சர் பரபரப்பு தகவல்!

தேர்தல் தர்பார் |விஸ்வரூபமெடுக்கும் பாஜக; விஜயைத் துரத்தும் சில்மிஷங்கள்!

பயங்கரம்... கார் ஏற்றி போலீஸ்காரர் கொலை: செம்மரக்கடத்தல் கும்பல் அட்டூழியம்!

வேலூரில் ஏ.சி.சண்முகம் போட்டி... பாஜக கூட்டணியில் யார், யாருக்கு எந்தத் தொகுதி?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in