பெரும் துயரம்... தலைகீழாக பள்ளத்தில் விழுந்த வேன்… 8 பேர் உயிரிழப்பு

பெரும் துயரம்... தலைகீழாக பள்ளத்தில் விழுந்த வேன்… 8 பேர் உயிரிழப்பு

உத்தராகண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தில் பள்ளத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மழை வெள்ளத்தில் சிக்கிய உத்தராகண்ட் மாநிலத்தில் அண்மையில் ஏற்பட்ட சுரங்க விபத்து பெரும் துயரத்தை ஏற்படுத்தியது. சுரங்கத்தில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்கள் இதுவரை மீட்கப்படவில்லை. மீட்புப்பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அடுத்த துயரமாக கோர விபத்து நைனிடால் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. இன்று அதிகாலை சேடகான் - மிடார் சாலையில் சென்றுகொண்டிருந்த வேன் ஒன்று  பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில்  8 பேர் உயிரிழந்தனர்.

வேன் பாட்லோட்டில் இருந்து அம்ஜத் கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்தது. எதிர்திசையில் தவறாக வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க முயற்சித்த போது, வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. வேனில் பயணித்த 6 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தனர். இதில் தம்பதி, ஒரு குழந்தை என ஒரு குடும்பமே உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் காயம் அடைந்த மேலும் மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கோர விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து  காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in