ஹூப்ளி இளம்பெண் கொலை வழக்கில் அதிர்ச்சி; செவிலியர்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட குற்றவாளி!

கொலை செய்யப்பட்ட அஞ்சலி, கைது செய்யப்பட்ட கிரீஷ் சாவந்த்.
கொலை செய்யப்பட்ட அஞ்சலி, கைது செய்யப்பட்ட கிரீஷ் சாவந்த்.
Updated on
2 min read

பெண்களிடம் சில்மிஷம் செய்ததால் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்ததில் ரயிலில் இருந்து குதித்த கொலைக்குற்றவாளி, மருத்துவமனையில் செவிலியர்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர் சிகிச்சை பெறும் அறைக்கு போலீஸார் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலம், ஹூப்ளியில் உள்ள வீராப்பூர் ஓனியைச் சேர்ந்தவர் அஞ்சலி அம்பிகர்(20). இவரை கிரீஷ் சாவந்த் என்ற வாலிபர் வீடு புகுந்து குத்திக்கொலை செய்தார். மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கில், குற்றவாளியான கிரீஷ் சாவந்த் தலைமறைவானார். அவரைப் பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டன.

கொலை செய்யப்பட்ட அஞ்சலி, கொலை செய்த கிரீஷ்.
கொலை செய்யப்பட்ட அஞ்சலி, கொலை செய்த கிரீஷ்.

இந்த நிலையில், படுகாயங்களுடன் கிரீஷ் சாவந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை அறிந்த ஹூப்ளி போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து விசாரணை நடத்திய போது, மைசூரில் இருந்து ஹூப்ளிக்கு ரயிலில் கிரீஷ் சாவந்த் சென்ற போது, ரயிலில் பெண் பயணிகளிடம் அவர் தவறாக நடந்து கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் அவரை அடித்து உதைத்துள்ளனர்.

கிரீஷ் சாவந்த்
கிரீஷ் சாவந்த்

அவர்களிடமிருந்து தப்பிக்க ஓடும் ரயிலில் இருந்து கிரீஷ் கீழே குதித்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை தாவண்கெரே போலீஸார் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். அஞ்சலியைக் கொலை செய்த குற்றவாளி அவர் தான் என்பதை அறிந்த போலீஸார், கிரீஷை கைது செய்தனர். அஞ்சலி கொலை வழக்கு சிஐடிக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில் ரயிலில் இருந்து குதித்ததால் காயமடைந்த கிரீஷ் சாவந்த், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் செவிலியர்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளனர். இதைத் தட்டிக்கேட்ட அறையில் பணிபுரிந்தவரையும் மிரட்டியுள்ளார். இதனால் கிம்ஸ் மருத்துவமனை ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், கிரீஷ் சிகிச்சை பெறும் அறைக்கு காவல் துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏழு போலீஸார், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அஞ்சலி வழக்கு சிஐடி மாற்றப்பட்டதையடுத்து, அதிகாரிகள் ஹீப்பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் கிரீஷிடம் வாக்குமூலமும் பெற்றுள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...


வங்கக்கடலில் புயல் சின்னம்... தேனி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கொட்டப் போகிறது கனமழை!

சோகம்... போலீஸ்காரருடன் தூக்கில் தொங்கிய இளம்பெண்!

காதலித்ததால் ஆத்திரம்... தங்கையை கோடாரியால் வெட்டிக்கொலை செய்த அண்ணன்கள்

மதுரை எய்ம்ஸ் திட்ட மதிப்பு... ரூ.1,978 கோடியிலிருந்து ரூ.2,021 கோடிகளாக உயர்வு!

உயர் தொழில்நுட்பம் படித்த தமிழர்களைக் குறிவைக்கும் வெளிநாட்டு மோசடிக் கும்பல்... கலெக்டர் எச்சரிக்கை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in