நர்சிங் கல்லூரி
நர்சிங் கல்லூரி

நர்சிங் கல்லூரி ஊழல்... விரிவான சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

Published on

மத்திய பிரதேசம் மாநிலத்தின் நர்சிங் கல்லூரிகள் ஊழல் விவகாரத்தில், சிபிஐ விசாரணையை விரிவுபடுத்திய உயர் நீதிமன்றம் புதிய உத்தரவினை பிறப்பித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் மாணவர் சங்கம் சார்பில் தாக்கலான வழக்கில், 2020-21-ம் ஆண்டில் அங்கீகாரம் பெற்ற நர்சிங் கல்லூரிகள் பெயரளவில் மட்டுமே செயல்படுவது குறித்து சிபிஐ விசாரணையை கோரியது. நீதிமன்ற விசாரணையில் மாநிலம் நெடுக இதுபோன்று நூற்றுக்கணக்கிலான நர்சிங் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி பெயரளவில் மட்டுமே செயல்பட்டு வந்ததும் தெரிய வந்தது.

சிபிஐ விசாரணை
சிபிஐ விசாரணை

பெரும்பாலான கல்லூரிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கட்டிடம் கூட இல்லாதது, சில கல்லூரிகள் நான்கைந்து அறைகளில் மட்டுமே இயங்கி வந்தது, நர்சிங் கல்லூரிக்கு அடிப்படையான ஆய்வகம் கூட இல்லாதது, பல கல்லூரிகள் ஒரே ஆசிரியர்களின் பெயரைப் பயன்படுத்தி இயங்கியது... உள்ளிட்ட முறைகேடுகள் கண்டறியப்பட்டன. இவை தொடர்பாக விசாரிப்பதற்கு சிபிஐ களமிறக்கப்பட்டது. தனது விசாரணையின் முடிவில் 308 நர்சிங் கல்லூரிகள் தொடர்பான விசாரணை அறிக்கையை சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இதனிடையே, மத்திய பிரதேசத்தின் மேலும் சுமார் 200 நர்சிங் கல்லூரிகளை சிபிஐ விசாரிக்கவில்லை என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மத்தியப் பிரதேச மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பட்டப் படிப்புகளை நடத்தும் கல்லூரிகளுடன் தொடர்புடைய செவிலியர் கல்லூரிகளுக்கு அப்பால், சுமார் 200 செவிலியர் கல்லூரிகளில் சிபிஐ ஆய்வு நடத்தவில்லை என முறையிடப்பட்டது.

நீதிமன்ற உத்தரவு
நீதிமன்ற உத்தரவு

இதனையடுத்து விடுபட்ட அந்த நர்சிங் கல்லூரிகள் குறித்தும் சிபிஐ விசாரணை நடத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கு விசாரணையின் போது, ​​நீதிபதி சஞ்சய் திவேதி மற்றும் நீதிபதி ஏ.கே.பாலிவால் அடங்கிய அமர்வு, அவசியமெனில் உயர் நீதிமன்றமே இந்த வழக்கில் நுழைந்து விசாணை மேற்கொள்ளும்என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியது. நர்சிங் கல்லூரிகளுக்கான அனுமதிகளை வழங்கியது, அவற்றை போலியான அடையாளத்தில், பெயரளவில் செயல்பட விட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில், கட்சி பேதமின்றி பல்வேறு அரசியல் தலைகள் விரைவில் உருள இருக்கின்றன.

இதையும் வாசிக்கலாமே...

'கை'விடப்படும் ஜோதிமணி; கரூரில் களம் காண்கிறாரா அமைச்சரின் மனைவி?

இரட்டை இலை சின்னம் முடங்கும்... அதிமுக முன்னாள் அமைச்சர் பரபரப்பு தகவல்!

தேர்தல் தர்பார் |விஸ்வரூபமெடுக்கும் பாஜக; விஜயைத் துரத்தும் சில்மிஷங்கள்!

பயங்கரம்... கார் ஏற்றி போலீஸ்காரர் கொலை: செம்மரக்கடத்தல் கும்பல் அட்டூழியம்!

வேலூரில் ஏ.சி.சண்முகம் போட்டி... பாஜக கூட்டணியில் யார், யாருக்கு எந்தத் தொகுதி?

x
காமதேனு
kamadenu.hindutamil.in