இனி இளைஞர்களுக்கு சிபிஐயில் முன்னுரிமை... மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி முடிவு

சிபிஐ
சிபிஐ

ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய பணிக்கு அழைத்துக் கொள்வது தொடர்பான தற்போது உள்ள விதிமுறைகளில் மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடியான மாற்றம் செய்துள்ளது. இதன் மூலமாக சிபிஐயில் இனி இளம் ஐபிஎஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.

மாநில பணியில் உள்ள இளம் ஐபிஎஸ் அதிகாரிகளை சிபிஐ பணிக்கு அழைத்து கொள்ளும் வகையில் தற்போதுள்ள விதிமுறைகளில் மத்திய உள்துறை அமைச்சகம் புதிய மாற்றங்களை செய்துள்ளது. நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான வழக்குகளை மத்திய குற்றப் புலனாய்வு அமைப்பான சிபிஐ கையாண்டு வருகிறது.

ஊழல் தடுப்பில் துவங்கி பல்வேறு குற்ற பின்னணியுடன் கூடிய வெவ்வேறு விதமான வழக்குகளாக இந்த விசாரணைகள் நடைபெறுகின்றன. ஆனால் அதற்கேற்ற வகையில் போதுமான எண்ணிக்கையிலான அதிகாரிகள் சிபிஐயில் இல்லை. இதனால் ஏராளமான வழக்குகள் தேங்கி கிடக்கின்றன. முக்கிய வழக்குகளுக்கு கூட மந்த நிலை காணப்படுகிறது.

சிபிஐ
சிபிஐ

வழக்குகளை தற்போது கையாளும் அதிகாரிகளுக்கும் கூடுதல் பணிச்சுமை இருந்து வருவதால் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. எஸ்பி அந்தஸ்தில் உள்ளவர்கள்தான் வழக்குகளில் விசாரணை அதிகாரிகளாக இருக்க முடியும். ஆனால் தற்போதுள்ள நிலவரப்படி மொத்தம் 42 எஸ்பி பணியிடங்கள் காலியாக உள்ளன.

அதிகாரிகள் பற்றாக்குறை நிலவுவதால் இதற்கு தீர்வாக மாநில பணிகளில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய பணிக்கு அழைத்து கொள்வதில் விதிமுறைகளை தளர்த்த மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதன்படி 9 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்ற விதியை தளர்த்தி, ஐந்து ஆண்டுகள் பணியில் இருந்தாலே போதுமானது என்ற விதியை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் கூடுதலாக இளைஞர்கள் பலரும் சிபிஐயில் பணியாற்றக்கூடிய வாய்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிபிஐ
சிபிஐ

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in