சீஸுக்குப் பதில் மலிவு விலை எண்ணெய்... மெக் டொனால்ட்ஸ் உணவகத்தின் உரிமம் அதிரடியாக ரத்து!

மெக் டொனால்ட்ஸ் உணவகம்
மெக் டொனால்ட்ஸ் உணவகம்
Updated on
2 min read

மகாராஷ்டிராவில், சீஸுக்குப் பதிலாக மலிவு விலை வெஜிடபிள் எண்ணெயை பயன்படுத்தியதாக மெக் டொனால்ட்ஸ் உணவகத்தின் உரிமத்தை ரத்து செய்து உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட உணவகமான மெக் டொனால்ட்ஸ் நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் கிளைகள் உள்ளன. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலம் அகமத்நகர் பகுதியில் மெக் டொனால்ட்ஸ் நிறுவனத்தின் கிளை ஒன்று செயல்பட்டு வந்தது. இங்கு பயன்படுத்தப்படும் சீஸ், தரம் குறைவாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் அவ்வப்போது குற்றம்சாட்டி வந்தனர். இந்த நிலையில் இது தொடர்பான ஒரு புகாரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

மெக் டொனால்ட்ஸ் நிறுவன உணவுகள்
மெக் டொனால்ட்ஸ் நிறுவன உணவுகள்

அப்போது சீஸுக்கு பதிலாக மலிவு விலை வெஜிடபிள் எண்ணெயை அந்நிறுவனம் பயன்படுத்தியது தெரியவந்தது. சீஸ் என்று பெயரிடப்பட்ட பொருட்கள் பெரும்பாலானவற்றிற்கும், இந்த மலிவு விலை எண்ணெயை அவர்கள் பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்து உணவு பாதுகாப்புத்க் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மேலும் அந்நிறுவனத்திற்கு சொந்தமான பிற கிளைகளிலும் ஆய்வு நடத்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

மெக் டொனால்ட்ஸ் நிறுவன உணவு வகை
மெக் டொனால்ட்ஸ் நிறுவன உணவு வகை

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், அமெரிக்காவின் உணவு மற்றும் மருத்துவத்துறையான எஃப்டிஏவிற்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்த மெக் டொனால்ட்ஸ் நிறுவனம், தாங்கள் விற்பனை செய்து வரும் சீஸ் என்ற பெயரிடப்பட்ட சில உணவு வகைகளின் பெயரை மாற்றுவதாக தெரிவித்திருந்தது. ஆனால் அது தொடர்பான முடிவு நிலுவையில் இருந்து வரும் நிலையில், தற்போது மெக் டொனால்ட்ஸ் மீது இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இது குறித்து விளக்கம் அளித்துள்ள மெக் டொனால்ட்ஸ் நிறுவனம் சீஸுக்கு பதிலாக மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்தவில்லை எனவும், தரமான சீஸ் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


நாளை மாசி மகம்: இல்லத்தில் தனம் பெருக இதை தானம் பண்ணுங்க!

விடாது துரத்திய விபத்து... தெலங்கானாவில் பெண் எம்எல்ஏ பலி!

அதிகாலையில் அதிர்ச்சி... முன்னாள் முதல்வர் காலமானார்!

லாட்டரியில் ரூ.1,00,00,000 பரிசு... பழநிக்கு பாதயாத்திரை சென்ற கேரள பக்தருக்கு அதிர்ஷ்டம்!

ராமேஸ்வரத்தில் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in