முறைகேடு நடந்ததாக கூச்சல்: மணிப்பூரில் இரு இடங்களில் வாக்குப்பதிவு நிறுத்தம்; மற்றொரு இடத்தில் வாக்குச்சாவடி சூறை

மணிப்பூரில் உடைத்துவீசப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்
மணிப்பூரில் உடைத்துவீசப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

மணிப்பூர் மாநிலத்தின் 5 தோங்ஜு, 31 கோங்மான் மண்டலத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் சில பெண்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூச்சல், அமளி ஏற்பட்டதால் அங்கு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதல்கட்ட மக்களவைத் தேர்தல் இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் உள்ள இன்னர் மணிப்பூர், அவுட்டர் மணிப்பூர் ஆகிய 2 மக்களவைத் தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை, இன்னர் மணிப்பூர் தொகுதியின் மொய்ராங் பகுதியில் உள்ள தமன்போக்பி வாக்குச் சாவடி அருகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால் அங்கு பீதி ஏற்பட்டது.

இந்நிலையில், இந்த பரபரப்பு ஓய்வதற்குள்ளாக இம்பாலின் இரண்டு முக்கிய இடங்களான 5 தோங்ஜு மற்றும் 31 கோங்மான் மண்டலத்தில் வாக்குச்சாவடியில் முறைகேடு நடந்ததாக பெண்கள் கூச்சலிட்டனர். இதனால் அந்த இரண்டு வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவை தேர்தல் அதிகாரி நிறுத்தினார்.

இதேபோல் இம்பால் கிழக்கில் உள்ள கோங்மானில் ஒரு வாக்குச் சாவடியில் ஆயுதங்களுடன் கூடிய நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் மூன்று பேர் காயமடைந்தனர். மேலும் அங்குள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். 2019 தேர்தலில் பாஜகவின் தோனோஜாம் பசந்த குமார் சிங் இன்னர் மணிப்பூர் தொகுதியில் வெற்றி பெற்றார். அவர் தற்போதைய தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறார்.

அதேசமயம், பழங்குடியின வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட அவுட்டர் மணிப்பூர் தொகுதியில், நாகா மக்கள் முன்னணி தலைவர் கச்சுய் திமோதி ஜிமிக் கடந்த தேர்தலில் வெற்றி பெற்றார். தற்போதைய தேர்தலில் அவரும் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார்.

வாக்குச்சாவடியில் கிழித்து வீசப்பட்ட ஆவணங்கள்
வாக்குச்சாவடியில் கிழித்து வீசப்பட்ட ஆவணங்கள்

கடந்த ஆண்டு மே மாதம் முதல் மணிப்பூர் மாநிலத்தில் இன குழுக்களிடையே வன்முறை நிலவி வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் அமைதியின்மை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு நடைபெற்று வரும் தேர்தலிலும் வன்முறை சம்பவங்கள் நிகழ்வது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

#Election2024: ரஜினி முதல் விஜய் வரை... வாக்களித்த பிரபலங்கள் லிஸ்ட்!

கோவையில் பரபரப்பு... திமுக நிர்வாகியை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற போலீஸார்!

பள்ளியில் பாடம் நடத்தாமல் ஃபேஷியல் செய்த தலைமை ஆசிரியை... வைரலாகும் வீடியோ!

ஜோதிகா மிஸ்ஸிங்... குடும்பத்துடன் வாக்களிக்க வந்த நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி!

பொள்ளாச்சி, கள்ளக்குறிச்சியில் ஹை ஸ்பீடு... ஒரு மணி நிலவரப்படி 46 சதவீத வாக்குப் பதிவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in