வேலை கிடைக்கவில்லை... தடைப்பட்ட திருமணம்; விரக்தியில் ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை
ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

செங்கல்பட்டு அருகே வேலை கிடைக்காததால், திருமணம் தடைபட்ட விரக்தியில், வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செங்கல்பட்டு அருகே சிங்கம்பெருமாள் கோயில் ரயில் நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு, இருசக்கர வாகனத்தில் ஒரு நபர், அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு திடீரெனப் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த தாம்பரம் ரயில்வே போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து உயிரிழந்தவர் யார் என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

உயிரிழந்த அசோக்
உயிரிழந்த அசோக்

விசாரணையில் உயிரிழந்தவர் மண்ணிவாக்கம் புதுநகர் பகுதியைச் சேர்ந்த அசோக் (33) என்பது தெரியவந்தது. எம்பிஏ பட்டதாரியான அசோக், வேலை தேடி வந்த நிலையில், படிப்புக்கு ஏற்ற சரியான வேலை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவருக்கும் உறவினர் பெண்ணுக்கும் திருமணம் செய்வது தடைப்பட்டதாகவும் தெரிகிறது. இதனால் விரக்தியில் இருந்து வந்த அசோக், இருசக்கர வாகனத்தில் சிங்கம்பெருமாள் கோயில் ரயில் நிலையத்திற்கு வந்து, தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in