அதிர்ச்சி... மனைவிக்கு வந்த ஆபாச மெசேஜ்: தட்டிக் கேட்ட கணவர் குத்திக் கொலை!

கொலை செய்யப்பட்டவரின் மனைவி ஷ்ரவாணி
கொலை செய்யப்பட்டவரின் மனைவி ஷ்ரவாணி

தனது மனைவிக்கு செல்போனில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியவரைக் கண்டித்த வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒடிசாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புவனேஸ்வர்
புவனேஸ்வர்

ஒடிசா மாநிலம், புவனேஸ்வரின் புறநகர் பகுதியில் உள்ள நுவாசாஹி கிராமத்தில் நேற்று இரவு கத்திக்குத்து காயங்களுடன் இளைஞர் ஒருவர் சாலையோரம் கிடந்தார். இதைப் பார்த்த வாகன ஓட்டிகள், பாலிபட்னா காவல் துறையினருக்குத தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விரைந்து வந்த போலீஸார், கத்திக்குத்து காயங்களுடன் கிடந்தவரை மீட்டனர். அப்போது அவரது தலை மற்றும் உடலின் பல பகுதிகளில் காயங்கள் இருந்தன. உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

விசாரணையில், காயமடைந்தவர் நுவாசாஹி கிராமத்தைச் சேர்ந்த அக்சய் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரது குடும்பத்தாருக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அக்சய் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது அக்சயின் தூரத்து உறவினரான திலு என்பவர் தான் இக்கொலை செய்ததாக அக்சயின் மனைவி ஷ்ரவாணி குற்றம் சாட்டினார். இதுகுறித்து அவர் கூறுகையில்," கடந்த 10 நாட்களுக்கு முன்பு திலு எனக்கு செல்போனில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பினார். இதை என் கணவரிடம் கூறினேன். இதனால் என் கணவருக்கும், திலுவிற்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது எனது கணவரை திலு தாக்கினார். இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அங்கு இருவரையும் போலீஸார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் தான், எனது கணவரை திலு அவரது தந்தை கலியா இருவரும் சேர்ந்து மரப்பலகைகளால் அடித்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்தனர்" என்று குற்றம் சாட்டினார்.

இப்புகார் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

திருமணம் செய்யலைன்னா தற்கொலை செய்துப்பேன்... இளைஞரை மிரட்டிய பெண் கைது!

தொழுகை நடத்திய வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல்: 2 பேர் கைது!

அமெரிக்காவால் மூன்றாம் உலகப் போர் உருவாகும்... ரஷ்யா அதிபர் புதின் எச்சரிக்கை!

'கடவுளே மன்னிச்சுடு... பவ்யமாக மன்னிப்புக் கேட்டு விட்டு கோயிலில் திருடிய திருடன்... வைரலாகும் வீடியோ!

பார்ட்டிகளில் பாம்பு விஷ போதை... பகீர் கிளப்பிய பிரபல யூடியூபர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in