திருடிவிட்டு தப்பிப்பதற்காக காது கேளாதவர், பேச இயலாதவர் போன்று நடித்த பலே திருடன்!

கைது
கைது

வீடுகளில் திருடிவிட்டு, சந்தேகத்தை தவிர்க்கவும், தப்பிப்பதற்காகவும் காது கேட்கும் திறன் மற்றும் பேச்சுத்திறன் இல்லாதவர் போன்று நடித்த கெட்டிக்காரத் திருடனை நொய்டா போலீஸார் கைது செய்தனர்.

உத்தர பிரதேச மாநிலம், நொய்டாவில் பிரபல சூப்பர் மார்க்கெட்டான டி-மார்ட் உள்ளது. இதன் அருகே சந்தேகத்துக் கிடமாக நின்று கொண்டிருந்த இளைஞரை பிஸ்ராக் போலீஸார் பிடித்தனர். அந்த இளைஞரிடம் விசாரித்தபோது அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ருத்ர வெங்கடேசன் (22) என்பதும், நொய்டாவில் வீடுகளில் நோட்டமிட்டு திருட்டுச் செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

லேப்டாப்கள் பறிமுதல்
லேப்டாப்கள் பறிமுதல்

இதையடுத்து ருத்ர வெங்கடேசன் அளித்த தகவல்படி, 9 மடிக்கணினிகள், அவற்றின் பைகள், சார்ஜர்கள், கத்தி ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இவர், வீடுகள் மற்றும் வாகனங்களில் உள்ள பொருட்களை திருடிவிட்டு தப்பிப்பதற்காக, தான் செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடு உள்ளவர் போன்று நடித்து வந்துள்ளார். இதற்காக ருத்ர வெங்கடேஷ் ஒரு கடிதத்தில் 'இந்த கடிதத்தை வைத்திருப்பவர் ஒரு ஊமை' என்ற வாசகத்தை எழுதி வைத்துக் கொண்டு, எதிர்படுபவர்களிடம் அதைக் கொடுத்திருக்கிறார்.

நொய்டா போலீஸ்
நொய்டா போலீஸ்

அதனை பெறுபவர்களின் கவனத்தை திசை திருப்பி தப்பிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்ததும் போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ருத்ர வெங்கடேசனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

ஊடகங்கள், வலைதளங்களிலும்கூட பிரச்சாரம் செய்யக்கூடாது... மீறினால் சிறை!

இறுதிகட்டத்தில் சூடு பிடிக்கும் பிரச்சாரம்... தேர்தல் பத்திர விவகாரத்தை கையிலெடுக்கும் இந்தியா கூட்டணி

திமிர் பிடித்த கூட்டணி தலைவர்களை இந்தத் தேர்தல் தண்டிக்கும்... எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி பாய்ச்சல்!

தேர்தல் நாளன்று சம்பளத்துடன் கட்டாய விடுமுறை... பெங்களூரு ஐ.டி நிறுவனங்களுக்கு உத்தரவு!

மின்சாரக் கார்களுக்கு என்னாச்சு... 14 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் டெஸ்லா!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in