கோவையில் அதிர்ச்சி... இரவில் இயற்கை உபாதை கழிக்கச் சென்றவரை மிதித்துக்கொன்ற யானை

வனப்பகுதியில் காட்டு யானை (கோப்பு படம்)
வனப்பகுதியில் காட்டு யானை (கோப்பு படம்)

கோவை மதுக்கரை அருகே யானை தாக்கியதில் கோயிலில் தங்கி இருந்தவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டி உள்ள கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் சமீப காலமாக அதிகரித்துள்ளது. உணவு மற்றும் தண்ணீர் தேடி, அடிக்கடி யானைகள் குடியிருப்பு பகுதிகளின் அருகில் நுழைந்து விடுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதனிடையே வனப்பகுதியில் இரவு நேரங்களில் யானை நிற்பது தெரியாமல் செல்வோர், யானை தாக்கி உயிர் இழக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மதுக்கரை வனச்சரகம் கரடிமடை பிரிவு பகுதியில் நேற்று இரவு வனத்துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது முதியவர் ஒருவர் வனப்பகுதியின் அருகே உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

யானை தாக்கி உயிரிழந்த சண்முகசுந்தரம்
யானை தாக்கி உயிரிழந்த சண்முகசுந்தரம்

வனத்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் யானை தாக்கியதில் முதியவர் இறந்திருக்கலாம் என தெரிய வந்தது. தொடர் விசாரணையில் உயிரிழந்தவர், பல்லடம் அருகே உள்ள வடவேடம்பட்டியை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பதும், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக வென்னல் பெருமாள் கோயில் வளாகத்தில் தங்கி இருந்து வந்ததும் தெரியவந்தது. இரவில் இயற்கை உபாதை கழிக்க வந்தபோது யானை அவரை தாக்கி இருக்கலாம் என தெரிவித்துள்ள வனத்துறையினர், பிரேத பரிசோதனைக்காக உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக ஆலந்துறை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in