பெண் கட்டிடத் தொழிலாளி சுத்தியலால் அடித்துக் கொலை... கைது செய்யப்பட்ட கொத்தனார் பரபரப்பு வாக்குமூலம்!

பெண் கட்டிடத் தொழிலாளி சுத்தியலால் அடித்துக் கொலை... கைது செய்யப்பட்ட கொத்தனார் பரபரப்பு வாக்குமூலம்!

ஆசைக்கு இணங்க மறுத்த பெண் தொழிலாளியை சுத்தியால் அடித்துக் கொலை செய்த கொத்தனார் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கே.கே.நகர் பக்தவச்சலம் காலனி ஆறாவது தெருவைச் சேர்ந்தவர் கௌசல்யா. தனது வீட்டை புனரமைக்க எண்ணிய கௌசல்யா இதற்காக அதே பகுதியைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி சந்துரு என்பவரை அணுகினார். பின்னர் மேஸ்திரி சந்துரு, கௌசல்யா வீட்டிற்குச் சென்று ஆய்வு செய்து விட்டு புனரமைப்பு பணிகளை மேற்கொண்டார். மேலும் இந்தப் பணியில் ஐந்துக்கும் மேற்பட்ட கட்டிட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

கொலை செய்யப்பட்ட சரண்யா
கொலை செய்யப்பட்ட சரண்யா

இந்நிலையில் கடந்த 29-ம் தேதி இரவு பணிகள் நடைபெறும் இடத்தை பார்வையிடுவதற்காக சந்துரு சென்றார். அப்போது அங்கு சித்தாள் வேலை பார்த்து வந்த எம்ஜிஆர் நகர் சூலைப் பள்ளம் பகுதியைச் சேர்ந்த சரண்யா(30) என்ற பெண் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக கே.கே. நகர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். இதன் பின் ராயப்பேட்டை மருத்துவமனையில் அவர் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் சந்துரு புகார் அளித்தார். இதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

கைது செய்யப்பட்ட வேல்முருகன்
கைது செய்யப்பட்ட வேல்முருகன்

இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரண் நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிர் இருந்தார். இதனையடுத்து எம்ஜிஆர் நகர் போலீஸார் இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் கொலையான சரண்யாவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கட்டிட புனரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருவெற்றியூரைச் சேர்ந்த கொத்தனார் வேல்முருகன் (40) என்பவர் சரண்யாவை சுத்தியலால் அடித்து கொலை செய்ததை போலீஸார் கண்டுபிடித்தனர் .

இதனையடுத்து வேல்முருகனை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது சம்பவத்தன்று கொத்தனார் வேல்முருகன் சித்தாள் வேலை பார்த்து வந்த சரண்யாவை தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு சரண்யா எதிர்ப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த வேல்முருகன் சுத்தியலால் சரண்யாவை தலையில் அடித்து விட்டு தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது‌. இதனைத் தொடர்ந்து வேல்முருகனை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் வாசிக்கலாமே...    

அறை எண் 2-ல் அடைக்கப்பட்டார் அர்விந்த் கேஜ்ரிவால்... திகார் சிறையில் என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?

உஷார்... இந்த வருடம் கோடை வெயில் அதிகரிக்கும்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அதிகாலையில் கோர விபத்து... ஆம்னி பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி இருவர் உயிரிழப்பு!

பாஜகவில் இணைகிறாரா டி.ஆர். பாலுவின் மகள்?.. திமுகவை திக்குமுக்காடச் செய்ய பலே திட்டம்!

தொடரும் ஈ.டி அதிரடி... திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பியின் ரூ.29 கோடி சொத்துகள் முடக்கம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in