
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தூத்துக்குடி மீனவர்கள் 12 பேரை மாலத்தீவு கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி தருவைகுளம் பகுதியில் இருந்து அதே பகுதியைச் சேர்ந்த மைக்கேல் பாக்யராஜ் என்பவர் படகில் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி ஆழ்கடலுக்கு விக்னேஷ், உதயகுமார், மைக்கேல்ராஜ், செல்வசேகரன், அந்தோணி கிருஷ்டோபர், பரலோக திரவியம், அன்பு, ஆதிநாராயணன், மகேஷ் குமார், மாதேஷ் குமார், மணி, சக்தி ஆகிய 12 பேர் மீன்பிடிக்க சென்றனர்.
இவர்கள் மீன்பிடித்துவிட்டு கடந்த 23-ம் தேதி மாலத்தீவு கடல் பகுதி வழியாக கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மாலத்தீவு கடற்படையினர், அத்துமீறி மாலத்தீவு கடல் பகுதியில் நுழைந்ததாக கூறி அவர்கள் 12 பேரையும் கைது செய்து விசைப்படகையும் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக மாலத்தீவு கடற்படையினர் மூலம் தருவைகுளம் மீனவர் கிராமத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மாலத்தீவு கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை, மத்திய, மாநில அரசுகள் மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசைப்படகு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாலத்தீவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள இப்ராஹிம் முகமது சோலி, இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார். சமீபத்தில் தொலைக்காட்சியில் பேசிய அவர், மாலத்தீவை விட்டு இந்திய ராணுவம் வெளியேறட்டும் என வெளிப்படையாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் தூத்துக்குடி மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
வில்வித்தை போட்டியில் கை இல்லாத இந்திய வீராங்கனை ஷீத்தல் தங்கம் வென்று சாதனை
நீட் விலக்கு மசோதா... நேரடியாக குடியரசுத் தலைவரிடமே முதல்வர் வலியுறுத்தல்!
3 அடி உயரம்... 250 கிலோ எடை... ரஜினிக்கு சிலை அமைத்து குடும்பத்துடன் வழிபடும் ரசிகர்!
5 வருடமாக படுத்தப் படுக்கையாக இருக்கும் பிரபல இயக்குநரின் மனைவி... கண்டுகொள்ளாத திரையுலகம்!
நவம்பர் மாதம் 14 நாட்கள் வங்கி விடுமுறை... பணிகளை முன்பே திட்டமிடுங்க!