3 அடி உயரம்... 250 கிலோ எடை... ரஜினிக்கு சிலை அமைத்து குடும்பத்துடன் வழிபடும் ரசிகர்!

ரஜினிக்கு சிலை
ரஜினிக்கு சிலை

நடிகர் ரஜினிகாந்திற்கு மதுரையை சேர்ந்த ரசிகர் ஒருவர் சிலை அமைத்து குடும்பமே வழிபடும் நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினிக்கு சிலை
ரஜினிக்கு சிலை

திரைத்துறை நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் சிலை அமைத்து ரசிகர்கள் வழிபாடு செய்வது புதிதல்ல. நடிகைகள் குஷ்பு, சமந்தா, நிதி அகர்வால் சமீபத்தில் இறந்துபோன ‘எதிர்நீச்சல்’ புகழ் மாரிமுத்து ஆகியோருக்கு ரசிகர்கள் சிலை அமைத்தனர். அந்த வரிசையில் மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர் கார்த்திக் என்பவர் ரஜினிக்கு சிலை அமைத்துள்ள செய்தி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 3 அடி உயரத்தில் 250 கிலோ எடையில் இவர் கற்சிலை அமைத்து தன் வீட்டிலேயே கோயில் போன்ற அறையை மாற்றியுள்ளார்.

ரஜினிக்கு வழிபாடு
ரஜினிக்கு வழிபாடு

ரஜினிகாந்தின் சிலைக்கு கீழ் தனது தாய், தந்தையர் புகைப்படத்தையும் விநாயகர் புகைப்படத்தையும் வைத்திருக்கிறார் கார்த்திக். மேலும், நாள்தோறும் ரஜினி சிலைக்கு பாலாபிஷேகம் செய்து குடும்பத்துடன் வழிபாடு நடத்தி வருகிறாராம். பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 6 வகை பொருட்களால் அபிஷேகம் செய்து, மாலை அணிவித்து தீபாராதனை நடத்தினார். தனக்கு உறுதுணையாக பெற்றோரும், மனைவியும் இருப்பதாகவும் பேட்டிகளில் கூறியுள்ளார்.

இதற்கு முன்பே, அவர் ரஜினியின் புகைப்படங்களை வைத்து வழிபாடு செய்து வந்த நிலையில் தற்போது ரஜினிக்கு கற்சிலை அமைத்திருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in