5 வருடமாக படுத்தப் படுக்கையாக இருக்கும் பிரபல இயக்குநரின் மனைவி... கண்டுகொள்ளாத திரையுலகம்!

இயக்குநர் விக்ரமன் மனைவி ஜெயப்பிரியா
இயக்குநர் விக்ரமன் மனைவி ஜெயப்பிரியா
Updated on
2 min read

கடந்த ஐந்து வருடங்களாக படுத்தப் படுக்கையாகக் கிடக்கும் இயக்குநர் விக்ரமனின் மனைவியை திரையுலகம் பெரிதாக கண்டு கொள்ளவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது ரசிகர்களை கலங்கடிக்கச் செய்துள்ளது.

இயக்குநர் விக்ரமன்
இயக்குநர் விக்ரமன்

’பூவே உனக்காக’, ‘சூர்யவம்சம்’, ‘வானத்தைப்போல’ என தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் விக்ரமன். ’குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி’ என்ற டேக்கை இன்றைய இணையவாசிகள் இவரது படத்தைக் குறிப்பிட்டு அவ்வப்போது டிரெண்ட் செய்து வருவார்கள். இந்த நிலையில், அவரது மனைவி ஜெயப்பிரியா கடந்த ஐந்து வருடங்களாக படுத்தப் படுக்கையாக உள்ளார்.

குச்சிபுடி கலைஞரான ஜெயப்பிரியா தமிழ் நாட்டில் 4000 மேடைகளில் நடனம் ஆடியவர். மருத்துவ குளறுபடியால் (medical error) கடந்த ஐந்து வருடங்களாகப் படுத்த படுக்கையாக இருக்கிறார். உடல் பாகங்கள் ஒவ்வொன்றாக பிரச்சினை ஏற்படுத்த தற்போது கிட்னி பிரச்சினையில் பாதிக்கப்பட்டுள்ளார்.

பட விழா ஒன்றில் மனைவியுடன் விக்ரமன்
பட விழா ஒன்றில் மனைவியுடன் விக்ரமன்

பல வருடங்களாக திரைப்படம் இயக்காமல் இருக்கும் விக்ரமன், தன்னுடைய மனைவியின் மருத்துவச் செலவுக்கு பணம் இல்லாமல் தன்னுடைய ஒவ்வொரு சொத்துக்களையும் விற்றுதான் கவனித்து வருகிறார். விக்ரமனின் மகனும் தற்போது சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். விக்ரமனின் மனைவி இப்படி பாதிக்கப்பட்டது அந்த குடும்பத்தின் சந்தோஷத்தையே கேள்விக்குறி ஆக்கியுள்ளது.

அதேபோல் தன்னுடைய மனைவியை பார்த்து கொள்வதற்காக, எந்த ஒரு விசேஷங்களிலும் அவர் கலந்து கொள்வதில்லை. மேலும் திரையுலகினரும் விக்ரமன் குடும்பத்திற்கு பெரிதாக உதவவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in