பெங்களூரு தோனி பள்ளி வளாகத்தில் உலாவரும் சிறுத்தையால் பீதி!

சிறுத்தை
சிறுத்தை

பெங்களூருவில் அமைந்திருக்கும் எம்.எஸ்.தோனி சர்வதேச பள்ளி அருகே சிறுத்தை ஒன்றின் நடமாட்டம் தென்பட்டதை தொடர்ந்து, அப்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பெங்களூருவில் செயல்படும் எம்.எஸ்.தோனி சர்வதேச பள்ளி வளாகத்திலும் அதனைச் சுற்றி அமைந்துள்ள பகுதிகளிலும், சிறுத்தை ஒன்றின் நடமாட்டம் நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து பள்ளி அமைந்திருக்கும் ஒயிட்ஃபீல்ட் பகுதியில் வசிப்போருக்கு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. எம்.எஸ்.தோனி பள்ளி நிர்வாகமும், மாணவ மாணவியரின் பெற்றோருக்கு சிறுத்தை நடமாட்டம் தொடர்பான அறிவுறுத்தல் மற்றும் எச்சரிக்கைகளை வழங்கியுள்ளது.

அதற்கான மின்னஞ்சலில், “சிங்கசந்திரா பகுதியில் சிறுத்தைப்புலி ஒன்று தென்பட்டது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. ஆனால் அதன் பிறகான தகவலின்படி, அந்த சிறுத்தையானது சற்று தொலை நகர்ந்து சென்று ஜிபி பாளையம் பகுதியில் தென்பட்டது. இவ்வாறு உலா வரும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பள்ளி வளாகத்திற்குள்ளும் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளோம்.

பள்ளி சார்பிலான பாதுகாப்புக் குழு மிகுந்த விழிப்புடனும், உன்னிப்பாகவும் கண்காணித்து வருகிறது. எனினும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதில், பெற்றோரின் ஒத்துழைப்பை தயைகூர்ந்து வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.எஸ்.தோனி பள்ளி வளாகம் மட்டுமன்றி எலக்ட்ரானிக் சிட்டி, பெங்களூரு தெற்கு, கெங்கேரி மற்றும் தேவனஹள்ளி அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளிலும் இதற்கு முன்னதாக சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு பல்கலைக்கழக வளாகத்தில் சிறுத்தை தென்பட்டதை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரவு நேர ரோந்து பணிகளை பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு பணியில் தனியார் பாதுகாவலர்கள் மேற்கொள்ள உத்தரவானது.

இந்த வரிசையில் தற்போது எம்.எஸ்.தோனி சர்வதேசபள்ளி வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளிலும் சிறுத்தை நடமாட்டத்தால் பதற்றம் சூழ்ந்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

அடுத்த அதிர்ச்சி... நீட் தேர்வால் மாணவி தற்கொலை!

அதிர்ச்சி... ‘பிரேமம்’ இயக்குநருக்கு ஆட்டிஸம் பாதிப்பு!

110 நாட்கள் உண்ணாவிரதம்... 16 வயது சிறுமியின் ஆச்சரிய சாதனை!

1000 ரூபாயில் செயற்கைக்கோள்... பிளஸ் 2 மாணவரின் அசர வைக்கும் கண்டுபிடிப்பு!

படப்பிடிப்பில் பிரபல நடிகர் படுகாயம்... மருத்துவமனையில் அனுமதி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in