2 நிமிட சுகத்துக்காக வாழ்க்கையை தொலைத்துவிடாதீங்க... சிறுமிகளுக்கு நீதிபதிகள் அறிவுரை

2 நிமிட சுகத்துக்காக வாழ்க்கையை தொலைத்துவிடாதீங்க... சிறுமிகளுக்கு நீதிபதிகள் அறிவுரை

2 நிமிட சுகத்துக்காக வாழ்க்கையை தொலைத்துவிடாதீர்கள் எனவும், இளவயது பாலியல் உறவுகளுக்கு பெண்களே குற்றச்சாட்டுக்கு உள்ளாவதாகவும், கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவுரை கூறியுள்ளனர்.

கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமியுடன் உடலுறவு வைத்துக் கொண்டதாக 20 வருட தண்டனை விதிக்கப்பட்ட இளைஞரின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. இந்த மனு நீதிபதிகள் சித்தரஞ்சன் தாஸ், பார்த்தசாரதி சென் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் தொடர்புடைய இளம் பெண் நேரில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்தார். தன்னுடைய விருப்பத்தின் பேரிலேயே உடலுறவு நடைபெற்றதாகவும், சம்பவத்திற்கு பிறகு தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு விட்டதாகவும் இளம் பெண் தெரிவித்தார்.

இருப்பினும் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சம்பவம் நடைபெற்ற போது பெண்ணுக்கு வயது 18 பூர்த்தியாகாததால் போக்சோ பிரிவின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதிகள், பள்ளிகளில் உடலுறவு தொடர்பாக உரிய சட்டம் மற்றும் சமூக வழிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட வேண்டும் என கருத்து தெரிவித்தனர். மேலும் இளம்வயதிலேயே இது போன்ற உடல் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்க சுய கட்டுப்பாடு அவசியம் எனவும் அவர்கள் அறிவுறுத்தினர்.

2 நிமிட சுகத்திற்காக இளம் பெண்கள் தங்களது வாழ்க்கையை தொலைத்து விடக்கூடாது எனவும் தங்களின் உடல் சார்ந்த சுயமரியாதையை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது பெண்களின் கடமை என்றும் தெரிவித்தனர். மேலும் ஆண் சிறுவர்களும் சக பாலினமான பெண்களின் உடல் குறித்து கௌரவத்துடன் நடந்து கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். இதையடுத்து இந்த வழக்கு இறுதித் தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா உயர்நீதிமன்றம்
கொல்கத்தா உயர்நீதிமன்றம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in