நிலக்கரி சுரங்கத்தில் இருந்து 3 சிறுவர்கள் கடத்தல்... தீவிரவாதிகள் கைவரிசையா என்று போலீசார் விசாரணை!

சிறுவர் கடத்தல்
சிறுவர் கடத்தல்
Updated on
2 min read

அருணாச்சல பிரதேசத்தில் நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்து வந்த 3 சிறுவர்கள் கடத்தப்பட்டனர். இதில், தீவிரவாத குழுக்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று இரு மாநில போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிலக்கரி சுரங்கம்
நிலக்கரி சுரங்கம்

அருணாச்சலப் பிரதேசத்தின் சாங்லாங் மாவட்டத்தில் அசாமைச் சேர்ந்த சிறுவர்கள் நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்து வந்தனர். இவர்களில் 3 சிறுவர்கள் தீவிரவாத குழுவினரால் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடத்தப்பட்ட சிறுவர்களை மீட்பதற்காக அசாம், அருணாச்சலப் பிரதேச மாநிலங்களின் போலீஸார், அசாம் ரைஃபிள்ஸ் படையினர் அடங்கிய குழு மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக துணை ராணுவப் படை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “கடத்தப்பட்ட சிறுவர்கள் கியான் தாபா, லெகான் போரா, சந்தன் நர்சாரி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடத்தப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை" என்றார்.

அசாம், அருணாச்சல பிரதேசம்
அசாம், அருணாச்சல பிரதேசம்

இந்நிலையில் சிறுவர்கள் பாதுகாப்பாக திரும்புவதை உறுதி செய்வதற்காக டின்சுகியா ஏஎஸ்பி பிபாஷ் தாஸ் இந்த விசாரணையை கண்காணித்து வருகிறார். அருணாச்சலப் பிரதேசத்தில் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, சாங்லாங் மாவட்டத்தின் ஃபெப்ரு பஸ்தி பகுதியில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை செய்த சிறுவர்களை உல்ஃபா (ஐ) மற்றும் நாகாலாந்தின் தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் (என்எஸ்சிஎன்) தீவிரவாதிகள் கடத்தியாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்த சிறுவர்களை தீவிரவாதிகள் கடத்தியதால் அம்மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


இன்றே கடைசி தேதி... இந்திய ரயில்வேயில் 5,696 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!

இன்று தமிழக பட்ஜெட் 2024 தாக்கல்... இடம் பெறுகிறது மாபெரும் ஏழு தமிழ் கனவுகள்!

அடுத்தக் கட்ட அதிரடி ... நடிகர் விஜய் கட்சி நிர்வாகிகள் இன்று திடீர் ஆலோசனை!

மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி?... விமான நிலையத்தில் கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி!

21ம் தேதி முதல் மீண்டும் போராட்டம் தொடரும்: 4வது சுற்று பேச்சுவார்த்தைக்குப் பின் விவசாயிகள் அறிவிப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in