முஸ்லிம்களை குறிவைத்து வீடியோ வெளியிட்ட விவகாரம்... ஜே.பி.நட்டாவுக்கு கர்நாடக போலீஸார் சம்மன்!

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா

இடஒதுக்கீடு தொடர்பாக முஸ்லிம்களை குறிவைத்து கர்நாடகா பாஜக அனிமேஷன் வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அமித் மால்வியா ஆகியோருக்கு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீடுகளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பறித்து, முஸ்லிம் சமுதாயத்துக்கு வழங்குவது போன்ற கருத்தை உள்ளடக்கி கர்நாடகா பாஜகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள கணக்கில் கடந்த 4ம் தேதி ஒரு அனிமேஷன் வீடியோ வெளியிடப்பட்டது.

இந்நிலையில், சர்ச்சைக்குரிய இந்த வீடியோ தொடர்பாக காங்கிரஸ் சார்பில் அம்மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் தேர்தல் ஆணையம், இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த பெங்களூரு போலீஸாருக்கு உத்தரவிட்டது.

பாஜக வெளியிட்ட சர்ச்சைக்குரிய வீடியோவில் இடம்பெற்ற காட்சிகள்
பாஜக வெளியிட்ட சர்ச்சைக்குரிய வீடியோவில் இடம்பெற்ற காட்சிகள்

இந்நிலையில் பெங்களூரு போலீஸார் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா, கர்நாடகா பாஜக மாநில தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், சர்ச்சைக்குரிய குறிப்பிட்ட வீடியோவை நீக்குமாறு கர்நாடக பாஜக மற்றும் எக்ஸ் வலைதளத்துக்கு தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டது.

இந்நிலையில் முஸ்லிம்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா ஆகியோருக்கு கர்நாடக காவல் துறை இன்று சம்மன் அனுப்பியுள்ளது.

போலீஸ் விசாரணை
போலீஸ் விசாரணை

அவர்கள் விசாரணைக்கு ஆஜராக ஒரு வாரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய வீடியோவில் இடம்பெற்ற குற்றச்சாட்டை, பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல்வேறு மூத்த பாஜக பிரமுகர்கள் சமீப நாட்களாக தேர்தல் பிரச்சாரங்களில் எதிரொலித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

கைவிரித்த லைக்கா... அஜித்தின் ‘விடாமுயற்சி’ அவ்வளவுதானா?

20 வருஷ கனவு... மொத்தமாக மாற போகுது கோவை... தயாராகுது புது திட்டம்!

ஏர் இந்தியா ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம்... நாடு முழுவதும் விமான சேவைகள் பாதிப்பு!

அனுபவம் பத்தாது... அரசியல் வாரிசாக அறிவித்தவரை அதிரடியாக நீக்கிய மாயாவதி

பரபரப்பு... பேருந்து பற்றி எரிந்ததால் நாசமான வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in