கன்னியாகுமரியில் நகை, பணம் மோசடி... கேரளாவில் பதுங்கியிருந்த பட்டதாரி பெண் கைது!

கைது செய்யப்பட்ட அஜி
கைது செய்யப்பட்ட அஜி

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள கன்றுபிலாவிளை கொற்றிகோடு பகுதியைச் சேர்ந்தவர் ரெஜிலின் மனோ. இவரது மனைவி அஜி(32). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

ரெஜிலின் மனோ வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில், அஜி தனது குழந்தைகளுடன் ஊரில் இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 8-ம் தேதி தோழி வீட்டுக்கு செல்வதாக தனது தாயிடம் கூறிவிட்டு தனது 2 குழந்தைகளை அழைத்துக் கொண்டு வீட்டில் இருந்து அவர் புறப்பட்டுச் சென்றுள்ளார். ஆனால், அதன் பின் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

மகளுக்கு என்னவானதோ என பதறிப்போன அஜியின் தாயார் பிரேமா இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடனடியாக இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார், விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கொற்றிக்கோடு மற்றும் தக்கலை பகுதியில் பலரிடம் நகை, பணத்தை வாங்கி விட்டு அஜி ஏமாற்றி சென்றதாக பலர் புகார் கொடுத்தனர். அந்த புகார்களைப் பெற்றுக்கொண்ட கொற்றிக்கோடு போலீஸார், அஜியைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, அவர் கேரள மாநிலம் பாறசாலை பகுதியில் தங்கியிருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீஸார், பாறசாலை போலீஸார் உதவியுடன் அஜியை கைது செய்து தமிழகம் அழைத்து வந்தனர்.

அவர் மேல் கொடுக்கப்பட்ட பல்வேறு மோசடி புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. பின்பு தக்கலை கோர்ட்டில் அஜி ஆஜர்படுத்தப்பட்டு, தக்கலை பெண்கள் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in