கண்மாயில் மீனைத் திருடி விற்ற காவலாளி... தட்டிக்கேட்ட குத்தகைக்காரர் வெட்டிப் படுகொலை!

கொலை
கொலை

ராஜபாளையம் அருகே கண்மாயை குத்தகைக்கு எடுத்து மீன் வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வந்த குத்தகைகாரர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ் (60). பொறியாளராக பணியாற்றி வந்த இவர், ராஜபாளையம் பொதுப்பணித் துறைக்கு பாத்தியப்பட்ட ஆதியூர் கண்மாயை மீன்பிடிக்க குத்தகை எடுத்திருந்தார். கண்மாய் பாதுகாப்பு பணிக்காக கார்த்தீஸ்வரன், ஆனந்த் என்பவர்கள் அங்கு குடிசை அமைத்து காவலாளிகளாக பணியாற்றி வந்தனர். இந்நிலையில், மீன்களைத் திருடியும், வெளியாட்களை வைத்து மீன்களைப் பிடிக்கும் வேலைகளை கார்த்தீஸ்வரன் செய்து வந்துள்ளார்.

குத்தகைதாரர் தர்மராஜ்
குத்தகைதாரர் தர்மராஜ்

இதுகுறித்து அறிந்த தர்மராஜ், காவல் வேலைக்கு வேண்டாம் என்று கார்த்தீஸ்வரனை மிரட்டி அனுப்பியுள்ளார். அதற்குப் பதிலாக முகவூரை சமுத்திரம் என்பவரை காவலாளியாக பணியில் அமைத்துள்ளார். இந்த நிலையில், வழக்கம் போல் தர்மராஜ் இன்று கண்மாய் கரையில் அமர்ந்துள்ளார். அங்கு, கஞ்சா போதையில் வந்த கார்த்தீஸ்வரன், மறைத்து வைத்திருந்த அரிவாளால் தர்மராஜின் தலை மற்றும் கையில் சரமாரியாக வெட்டி விட்டுத் தப்பிச் சென்றுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த காவலாளி சமுத்திரம், இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்துள்ளார்.

தர்மராஜ் கொலையான இடம்
தர்மராஜ் கொலையான இடம்

அவர்கள் வந்து பார்த்த போது, ரத்த வெள்ளத்தில் தர்மராஜ் இறந்து கிடந்தார். அவரது உடலை மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த கொலையில் கார்த்தீஸ்வரன் மட்டும் தான் ஈடுபட்டுள்ளாரா அல்லது வேறு யாரும் சம்பந்தப்பட்டுள்ளனரா உள்ளிட்ட கோணங்களில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருட்டுத்தனமாக மீன்பிடித்து விற்பனை செய்த நபரை கண்டித்ததால், இந்த கொலை நடந்ததாக போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு... மத்திய அரசு அறிவிப்பு!

கர்ப்பிணிகளுக்கான ஃபேஷன் ஷோ... ரேம்ப் வாக்கில் கலக்கிய அமலாபால்!

தனுஷை விட ஐஸ்வர்யா மோசம்; முன்னாள் கணவர் ஓரினச்சேர்க்கையாளர் ...பகீர் கிளப்பும் பாடகி சுசித்ரா!

அதிகரிக்கும் வெயில்; காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு கட்டுப்பாடு!

கோவையில் பரபரப்பு... பாலியல் வழக்கில் கைதான சிறுவன் தற்கொலை முயற்சி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in