ஜெயக்குமார் கொலை வழக்கு; எலும்புகள் டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு!

ஜெயக்குமார் தனசிங்
ஜெயக்குமார் தனசிங்

நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங்கின் எலும்புகள் டிஎன்ஏ பரிசோதனைக்காக மதுரை மண்டல தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஜெயக்குமார் இறுதிச்சடங்கு
ஜெயக்குமார் இறுதிச்சடங்கு

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள கரைசுத்துபுதூரை சேர்ந்தவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங். இவர் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த இவரை காணவில்லை என அவரது மகன் ஜெஃப்ரின், நெல்லை காவல் துறையில் புகார் அளித்திருந்த நிலையில் கடந்த 4 ம் தேதி அவரது வீட்டுக்கு பின்னால் உள்ள தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் ஜெயக்குமார் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில்  8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. பிரேத பரிசோதனையில் ஜெயக்குமாரின் குரல்வளை முற்றிலும் எரிந்துள்ளதும், ஜெயக்குமாரின் நுரையீரலில் திரவங்கள் எதுவுமில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. இதனால் பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் ஜெயக்குமார் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என காவல்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

விசாரணைக்கு ஆஜரான தங்கபாலு
விசாரணைக்கு ஆஜரான தங்கபாலு

ஜெயக்குமார் தனது மரண வாக்குமூலத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் கே வி தங்கபாலு, காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன் உள்ளிட்டோரது பெயர்களை குறிப்பிட்டுருந்ததால் அவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். முன்னாள் எம்பி தனுஷ்கோடி ஆதித்தனிடமும்  விசாரணை நடைபெற்றுள்ளது.

இருப்பினும் இந்த வழக்கில் இன்னும்  துப்பு துலங்காத நிலையில், அந்தப் பகுதியில் நான்கு மாவட்ட கூலிப்படையினரிடம் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஜெயக்குமாரின் எலும்புகள் டி.என்.ஏ பரிசோதனைக்காக மதுரை மண்டல தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. டிஎன்ஏ அறிக்கை வந்தவுடன் ஜெயக்குமார் மகனின் டிஎன்ஏக்களை ஒப்பிட்டுப் பார்த்து அதன்மூலம் வழக்கில் உண்மையைக் கண்டறிய போலிஸார் திட்டமிட்டுள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

சென்னையில் அதிகாலையில் கொட்டித் தீர்த்த மழை... 4 நாட்களுக்கு வெப்பம் குறையும் என அறிவிப்பு!

பெங்களூருவில் பரபரப்பு... ரேவண்ணாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு!

உலக செஞ்சிலுவை தினம்: பேரிடர் முதல் போர் வரை... கலங்கிய மக்களுக்கு ஓடோடி உதவிய கடவுளின் தூதுவர்கள்

பெண் பத்திரிகையாளர் பரபரப்பு புகார்... சவுக்கு சங்கர் மீது சென்னையிலும் 2 வழக்குகள் பதிவு!

பரபரப்பு... உலகம் முழுவதும் தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் அறிவிப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in