ஆந்திராவில் வாக்காளரை அறைந்த ஆளும் கட்சி எம்எல்ஏ; திருப்பி அறைந்ததால் கலவரமான வாக்குச்சாவடி!

ஆந்திர மாநிலம் குண்டூரில் வாக்காளர், எம்எல்ஏ சிவகுமார் பரஸ்பரம் தாக்குதல்
ஆந்திர மாநிலம் குண்டூரில் வாக்காளர், எம்எல்ஏ சிவகுமார் பரஸ்பரம் தாக்குதல்

ஆந்திர மாநிலத்தில் வாக்காளரை ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ அறைந்ததும், உடனடியாக எம்எல்ஏ-வை அந்த வாக்காளர் திருப்பி அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவைத் தேர்தலின் நான்காவது கட்ட வாக்குப்பதிவு இன்று நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில், ஆந்திர மாநிலத்தில் 25 மக்களவைத் தொகுதிகளுடன், 175 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் சேர்த்து இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அம்மாநிலத்தில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏவான வி.எஸ்.சிவகுமார், குண்டூரில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று காலை வாக்காளர் ஒருவரை திடீரென கன்னத்தில் அறைந்தார்.

கன நேரத்தில் அந்த வாக்காளரும் எம்எல்ஏ கன்னத்தில் திருப்பி அறைந்தார். இதையடுத்து அங்கிருந்த எம்எல்ஏ ஆதரவாளர்கள், வாக்காளரை சுற்றி வளைத்து கூட்டமாக தாக்கினர். இதனால் வாக்குச் சாவடியில் களேபரம் ஆனது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஷாத் பூனவல்லா பகிர்ந்து, ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி கட்சி எம்எல்ஏ-வின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'விவிஐபி-யின் ஆணவம் மற்றும் குண்டர் செயல். குண்டூரில் வாக்காளரை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ சிவகுமார் அறைந்தார். தெலங்கானா காங்கிரஸ் தலைவர் வாக்காளர்களை உதைத்தார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரன்தீப் சுர்ஜேவாலா ஒருமுறை மக்களை அரக்கர்கள் என அழைத்தார்.

குண்டூரில் வாக்குச் சாவடியில் வன்முறை
குண்டூரில் வாக்குச் சாவடியில் வன்முறை

வாக்குச் சாவடியிலேயே வாக்காளர்களை இப்படி நடத்துகிறார்கள் என்றால், தேர்தலுக்குப் பிறகு அவர்கள் என்ன செய்வார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். இந்த கட்சிகளையும், தலைவர்களையும் வெளியேற்ற வேண்டிய நேரம் இது.’ என குறிப்பிட்டுள்ளார்.

வாக்குச்சாவடியில் வாக்காளரை ஆளும் கட்சி எம்எல்ஏ- அறைந்து, தாக்கிய சம்பவம் ஆந்திர பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

குருத்வாராவில் சீக்கிய தலைப்பாகை அணிந்து உணவுப் பரிமாறிய பிரதமர் மோடி!

திமுக எம்எல்ஏவின் மருமகன் வெட்டிக்கொலை.... தஞ்சையில் பயங்கரம்

தெற்கு பிரேசிலில் பலத்த மழை: ஆறுகளில் வெள்ளப் பெருக்கு; 145 பேர் உயிரிழப்பு

ஜிவி பிரகாஷ் விவாகரத்து சர்ச்சை... சைந்தவி ரியாக்‌ஷன் என்ன?

காதலி கண்முன்னே பயங்கரம்... பைக்கில் சென்ற கல்லூரி மாணவன் வெட்டிக்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in