ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 16 வரை நீட்டிப்பு... டெல்லி கோர்ட் அதிரடி!

ஜாபர் சாதிக்
ஜாபர் சாதிக்

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் உள்ளிட்ட ஐந்து பேருக்கு ஏப்ரல் 16 வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜாபர் சாதிக்
ஜாபர் சாதிக்

2000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளை வெளிநாடுகளுக்கு கடத்திய வழக்கில் திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் டெல்லியில் போதைப்பொருளை கையும் களவுமாக பிடித்தபோது முகேஷ், முஜிபுர் ரகுமான், அசோக் குமார் ஆகிய மூன்று பேர் கைது  செய்யப்பட்டனர்.

பின்னர் தீவிர தேடுதலுக்குப் பின்னர் ஜாபர் சாதிக்கும் கைது செய்யப்பட்டார். அவரிடம்  நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில், அவரது கூட்டாளியான சதா என்பவரும் பின்னர் சென்னையில் கைது செய்யப்பட்டார். இந்த ஐந்து பேருக்கும் இன்றுடன் நீதிமன்றக் காவல் முடிவடைந்ததையடுத்து அவர்கள் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களுக்கு  ஏப்ரல் 16 வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னையில் உள்ள தனது வீட்டிற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரிய ஜாபர் சாதிக்கின் மனு மீதான விசாரணை ஏப்ரல் 5 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சிறையில் உள்ள  ஜாபர் சாதிக்கிடம் குரல் மாதிரி பரிசோதனை எடுத்துக் கொள்ளலாம் என போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...    

அறை எண் 2-ல் அடைக்கப்பட்டார் அர்விந்த் கேஜ்ரிவால்... திகார் சிறையில் என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?

உஷார்... இந்த வருடம் கோடை வெயில் அதிகரிக்கும்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அதிகாலையில் கோர விபத்து... ஆம்னி பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி இருவர் உயிரிழப்பு!

பாஜகவில் இணைகிறாரா டி.ஆர். பாலுவின் மகள்?.. திமுகவை திக்குமுக்காடச் செய்ய பலே திட்டம்!

தொடரும் ஈ.டி அதிரடி... திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பியின் ரூ.29 கோடி சொத்துகள் முடக்கம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in